Guru Palan: மே மாதத்தில் கொட்ட போகும் குரு பகவான்.. ராஜயோகத்தை பெறுகின்ற ராசிகள்
குரு பகவான் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் இங்கே காண்போம்.
நவக்கிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக்கூடியவர் குரு பகவான். இவர் எப்போதும் அனைத்து ராசிகளுக்கும் செல்வத்தை அள்ளிக் கொடுக்கக் கூடியவர். நவகிரகங்களின் ராஜகுருவாக விளங்கக்கூடிய இவர் எந்த ராசிக்கும் பாதகத்தை ஏற்படுத்துவது கிடையாது.
அவருடைய இடமாற்றத்தை பொறுத்து அனைத்து ராசிகளுக்கும் நன்மை மற்றும் தீமைகள் கிடைக்கும். குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார் இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் வரும் மே ஒன்றாம் தேதி அன்று குரு பகவான் ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். இது சுக்கிர பகவானின் சொந்த ராசியாகும். குரு பகவானால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் இவருடைய இடமாற்றத்தால் ராஜயோகத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.
ரிஷப ராசி
சுக்கிர பகவானை அதிபதியாகக் கொண்டவர்கள். நீங்கள் உங்களுக்கு குரு பகவான் அள்ளிக் கொடுக்கப் போகின்றார். அவருடைய இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. செலவுகள் அனைத்தும் சுபமாக இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உங்களுக்கு சாதகமான பலன்கள் அனைத்தும் அமையும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது.
கடக ராசி
மே ஒன்றாம் தேதி முதல் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கப் போகின்றது. குருபகவான் உங்களுக்கு சாதகமான செயல்களை செய்யப் போகின்றார். வேலையில் நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கையில் சிறப்பான மாற்றங்கள் அமையும். அது உங்களுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாகும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
சிம்ம ராசி
பணவரவில் எந்த குறையும். இல்லாமல் மே மாதத்தில் இருந்து குருபகவான் உங்களை பார்த்துக் கொள்ளப் போகின்றார். உங்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. வெளிநாடு ஒப்பந்தங்கள் சாதகமாக அமைய வாய்ப்பு உள்ளது. வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்க உள்ளது. குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உங்களால் அமையும்.
கன்னி ராசி
குருபகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். வேலை செய்யும் இடத்தில் சிறப்பான பலன்கள் அமையும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். பண வரவில் எந்த குறையும் இருக்காது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்