தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will Find The Zodiac Signs That Guru Bhagavan Will Get Heavenly Life

Guru Bhagavan: குரு தரும் சொர்க்க வாழ்க்கை.. இந்த ராசிகளுக்கு யோகம்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 24, 2024 04:05 PM IST

குரு பகவான் சொர்க்க வாழ்க்கையை பெறப்போகும் ராசிகள் இங்கே காண்போம்.

குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

நவக்கிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அவர்களுடைய இடமாற்றத்தின் பொழுது 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாழ்த்தும் இருக்கும். அந்த வகையில் குரு பகவானும் தனது இடத்தை மாற்றுவார். குரு பகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

குரு பகவானால் பன்னிரண்டு ராசிகளுக்கும் மிகப்பெரிய சிக்கல்கள் ஏற்படுவது கிடையாது. அவருடைய இடமாற்றத்தை பொறுத்தே சுப மற்றும் அசுப பலன்கள் கிடைக்கின்றன. அந்த வகையில் குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகிறார். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார்.

தேவர்களின் தலைவனாக அந்தஸ்து பெற்றுள்ள குரு பகவானின் இடமாற்றம் எந்தெந்த ராசிகளுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

 

குருபகவானின் இடமாற்றம் உங்களுக்கு சிறப்பை கொடுத்து வருகிறது. பணவரவில் இருந்த குறையும் இருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் இன்பம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்திலிருந்து சிக்கல்கள் அனைத்தும் விலகும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகி பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

கடக ராசி

 

குருபகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். அகஸ்டின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். இந்த ஆண்டு சிறப்பான வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். உயர் அலுவலர்களிடம் பாராட்டுக்கள் கிடைக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியடையும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

சிம்ம ராசி

 

குருபகவான் உங்களுக்கு யோகத்தை அள்ளிக் கொடுக்க போகின்றார். இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பான ஆண்டாக அமைய உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய முயற்சிகள் கைகூடும். கூட்டு முயற்சிகள் உங்களுக்கு ஏற்றவாறு அமையும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அனைத்தும் கிடைக்கும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் அதிகமாகும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். ஆராய்ச்சி துறையில் முன்னேற்றம் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.