Sukra Peyarchi: சுக்கிரன் இடப்பெயர்ச்சி.. ராஜயோக ராசிக்காரர்கள் இவர்கள்தான்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sukra Peyarchi: சுக்கிரன் இடப்பெயர்ச்சி.. ராஜயோக ராசிக்காரர்கள் இவர்கள்தான்

Sukra Peyarchi: சுக்கிரன் இடப்பெயர்ச்சி.. ராஜயோக ராசிக்காரர்கள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jan 19, 2024 09:35 AM IST

சுக்கிர இடப்பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

சுக்கிர பெயர்ச்சி
சுக்கிர பெயர்ச்சி

இது போன்ற போட்டோக்கள்

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள் அந்த வகையில் சுக்கிர பகவான் நேற்று தனது இடத்தை மாற்றினார். அது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் சுக்கிர பகவான் மாதத்திற்கு ஒருமுறை இடமாறக்கூடியவர். சுக்கிர பகவான் ஜனவரி 18ஆம் தேதியன்று தனுசு ராசிக்கு உள் நுழைந்தார். வரும் பிப்ரவரி 12ஆம் தேதி வரை எதிராசியில் பயணம் செய்ய உள்ளார். இந்த சுக்கிரனின் இடமாற்றத்தால் நல்ல நேரத்தை சந்திக்கப் போகும் ராசிகளை இங்கே காண்போம்.

மீன ராசி

 

சுக்கிர பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். புதிய வழிகள் உங்களுக்கு தோன்றி நல்ல யோகத்தை கொடுக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

மகர ராசி

 

நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆதாயங்கள் உண்டாகும் செலவுகளை மிகவும் கவனமாக செய்ய வேண்டும். அதைக் கவனித்துக் கொண்டால் போதும் சேமிப்பு அதிகரிக்கும். இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

விருச்சிக ராசி

 

சுக்கிரன் உங்களுக்கு அற்புதமான பலன்களை கொடுக்கப் போகின்றார். சுக்கிரனின் இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரப் போகின்றது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. சொந்த தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உண்டாகும். பணவரவில் இருந்த குறையும் இருக்காது. புதிய முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9