தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will Find The Zodiac Signs That Get Lucky Due To Mars Transit

Mars transit: செவ்வாய் கொட்டும் யோகம் இந்த ராசிகளுக்கு மட்டுமே

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 21, 2024 04:47 PM IST

செவ்வாய் மாற்றத்தால் அதிர்ஷ்டத்தை பெறும் ராசிகளை இங்கே காண்போம்.

செவ்வாய் பெயர்ச்சி
செவ்வாய் பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

அந்த வகையில் செவ்வாய் பகவான் ஜனவரி 17ஆம் தேதி அன்று அதிகாலை தனுசு ராசிக்குள் உதயமானார். செவ்வாய் பகவானின் உதயம் பிப்ரவரி 5ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

நவகிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாது உதயம் அஸ்தமனமும் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு சாதகமாக அமைய உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் உதயமாகின்ற காரணத்தினால் உங்களுக்கு அனுபவரீதியாக நல்ல பலன்கள் உண்டாகும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். திட்டமிட்டு செயல்பட்டால் சாதிக்க முடியும். வெளிநாட்டில் வேலை செய்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் புதிய பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு படைத்த அதிக வாய்ப்பு உள்ளது. அதன் காரியங்கள் அனைத்தும் விலகும் நல்ல லாபம் கிடைக்கும்.

மிதுன ராசி

 

செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் உதயமாகின்றார். உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். உங்களுடைய முன்னேற்றத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் .திருமண வாழ்க்கையில் சமூகமான உறவு ஏற்படும்.

கடக ராசி

 

செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் உதிக்கின்றார். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் முன்னேற்ற பாதையில் வாய்ப்புகள் அதிகமாக உண்டாகும். புதிய வேலைக்கு மாறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். செலவுகள் கட்டுப்படுத்தப்பட்டு சேமிப்பு அதிகமாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.