தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will Find The Zodiac Signs That Get Good Life From Lord Saturn

Shani Luck: சனி கொட்டுவார்.. பண மழையை யாராலும் தடுக்க முடியாது

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 28, 2024 09:50 AM IST

சனி பகவானால் நல்ல வாழ்க்கையை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

சனி பெயர்ச்சி
சனி பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை சனி பகவான் மாற்றுகிறார். சனி பகவான் கடின உழைப்புக்கு நல்ல பலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். நன்மைகள், தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார். அதன் காரணமாக சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.

கிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து வித செயல்பாடுகளும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கும்ப ராசியில் பயணம் செய்து வரும் சனி பகவான் பிப்ரவரி மாதத்தில் அஸ்தமனம் ஆகி மார்ச் மாதத்தில் உதயமாகின்றார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட மூன்று ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

உங்கள் ராசியில் 11வது வீட்டில் சனி உதயம் ஆகின்றார். நீண்ட நாட்களாக ஏற்பட்டு வந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். கடின உழைப்புக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். வேலை தொடர்பான நல்ல செய்திகள் உங்களைத் தேடி வரும்.

மிதுன ராசி

 

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனிபகவான் உதயம் ஆகின்றார். இதனால் உங்களுக்கு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்கள் இருக்கும். மார்ச் மாதத்தில் உங்களுக்கு அனைத்து சிக்கல்களும் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் சனி பகவான் உதயம் ஆகின்றார். இதனால் உங்களுக்கு மார்ச் மாதம் முதல் சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழில் விரிவாகும் அதிக பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். கூட்டத்தொழில் முயற்சிகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel