Tamil News  /  Astrology  /  Here We Will Find The Zodiac Signs That Get A Change Of Fortune From Lord Mercury

Budhan Peyarchi: புதனின் சம்பவம் பிப்ரவரியில் உறுதி

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 19, 2024 01:54 PM IST

புதன் பகவானால் அதிர்ஷ்ட மாற்றத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

புதன் பெயர்ச்சி
புதன் பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த வகையில் புதன் பகவான் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி அன்று புதன் பகவான் தனது பயணத்தை மாற்ற போகின்றார்.

அன்றைய தினம் முதல் புதன் பகவான் மகர ராசியில் பயணம் செய்ய உள்ளார். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்பட்டாலும் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்படுவது உறுதி. புதன் பகவானின் இடமாற்றத்தால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

மேஷ ராசி

 

புதன் பகவான் உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கப் போகின்றார். எதிர்பாராத நேரத்தில் பணவரவு அதிகமாகும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். வாழ்க்கைத் துணையோடு இணைந்து செயல்பட்டால் பல்வேறு விதமான முன்னேற்றங்கள் கிடைக்கும். நிதி ஆதாயம் உண்டாக வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மிதுன ராசி

 

புதன் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. வேலை செய்யும் இடத்தில் பல்வேறு விதமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். பல பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை தரும். மற்றவர்களிடத்தில் நல்ல புரிதல்கள் ஏற்படும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

கடக ராசி

 

உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளை புதன் பகவான் உருவாக்கி கொடுப்பார். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உருவாகும். வாழ்க்கை துணையுடன் அன்பு அதிகரிக்கும். இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

சிம்ம ராசி

 

புதன் பகவானால் உங்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் நல்ல காலம் தொடங்குகிறது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. நிலத்தில் புதிய முதலீடுகள் செய்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வாழ்க்கை துணையோடு அன்பு அதிகரிக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.