Sani Asthamanam: சனி அஸ்தமனத்தில் ராஜயோகத்தை அனுபவிக்கும் ராசிகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sani Asthamanam: சனி அஸ்தமனத்தில் ராஜயோகத்தை அனுபவிக்கும் ராசிகள்

Sani Asthamanam: சனி அஸ்தமனத்தில் ராஜயோகத்தை அனுபவிக்கும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Published Feb 21, 2024 11:04 AM IST

சனி அஸ்தமனத்தால் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ள ராசிகளை இங்கே காண்போம்.

சனி பெயர்ச்சி
சனி பெயர்ச்சி

இது போன்ற போட்டோக்கள்

கர்ம நாயகனாக விளங்கக்கூடிய சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். சனி பகவான் தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ராசியில் குடியேறியுள்ளார்.

இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 இல் தனது இடத்தை மாற்றுகிறார். அனைத்து விதமான அசைவுகளும் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் பிப்ரவரி பதினொன்றாம் தேதி அன்று கும்ப ராசியில் சனி பகவான் அஸ்தமனமானார். வரும் மார்ச் 26 ஆம் தேதி வரை இதே நிலையில் பயணம் செய்வார்.

சனிபகவானின் அஸ்தமன செயல்பாடு அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்படும். இருப்பினும் ஒரு சில ராசிகள் சிறப்பான பலன்களை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மிதுன ராசி

சனி பகவான் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் அஸ்தமனம் ஆனார். இதனால் உங்களுக்கு சிறப்பு ஆசிர்வாதம் கிடைத்துள்ளது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைத்துள்ளது. வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பண வரவில் இந்த குறையும் இருக்காது.

கடக ராசி

 

உங்கள் ராசிகள் எட்டாவது சனி அஸ்தமனம் ஆகி உள்ளார். அதனால் உங்களுக்கு இது சாதகமான காலமாக அமைந்துள்ளது. வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். சிறப்பான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய திட்டத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் குறையும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

சிம்ம ராசி

 

சனியின் அஸ்தமனம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பலன்கள் இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். பண வரவில் இந்த குறையும் இருக்காது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

Whats_app_banner