தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  12 வருடங்களுக்குப் பிறகு குரு சூரிய சேர்க்கை.. 3 ராசிகளுக்கு பணமழை.. அதிர்ஷ்டம் தேடி வருகுது.. ராஜ வாழ்க்கை தொடக்கம்

12 வருடங்களுக்குப் பிறகு குரு சூரிய சேர்க்கை.. 3 ராசிகளுக்கு பணமழை.. அதிர்ஷ்டம் தேடி வருகுது.. ராஜ வாழ்க்கை தொடக்கம்

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 17, 2024 10:25 AM IST

Guru Sun conjunction: குரு மற்றும் சூரியன் இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். இவர்களின் சேர்க்கை 12 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்கின்றது. இந்த சேர்க்கை மே ஒன்றாம் தேதி வரை நீடிக்கும் இதனால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர்.

குரு மற்றும் சூரியன்
குரு மற்றும் சூரியன்

நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. தற்போது குருபகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் மே மாதம் ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார்.

இந்நிலையில் தலைவனாக விளங்கக்கூடிய சூரிய பகவான் ஏப்ரல் 13-ஆம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைந்தார். ஏற்கனவே குருபகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் தற்போது குரு மற்றும் சூரியன் இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். 

இவர்களின் சேர்க்கை 12 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்கின்றது. இந்த சேர்க்கை மே ஒன்றாம் தேதி வரை நீடிக்கும் இதனால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்

மேஷ ராசி

 

உங்கள் ராசியில் முதல் வீட்டில் குரு சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்க கூடும். நிதி நிலைமையில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.

கடக ராசி

 

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் குருபகவான் மற்றும் சூரிய பகவான் சேர்ந்துள்ளனர். இதனால் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

மீன ராசி

 

உங்கள் ராசிகள் இரண்டாவது வீட்டில் குரு மற்றும் சூரியன் சேர்க்கை நிகழ்ந்துள்ள காரணத்தினால் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கப்போகின்றது. நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் பெறக்கூடும். பேச்சுத் திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். சிக்கிக் கிடந்த பணங்கள் உங்களை தேடி வரும். அரசியல் வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைகள் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். இதுவரை ஏற்பட்டு வந்த கஷ்டங்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel