தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will Find The Zodiac Signs That Are Going To Get Lucky From Guru Bhagavan

Guru 2024: குபேரனாக மாறப்போகும் குரு ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 13, 2024 09:45 AM IST

குரு பகவானால் அதிர்ஷ்டம் பெற போகும் ராசிகளை இங்கே காண்போம்.

குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

செல்வம் செழிப்பு குழந்தை பாக்கியம் திருமண பாக்கியம் உள்ளிட்டவர்களின் காரணியாக குரு பகவான் விளங்கி வருகிறார். நவகிரகங்களில் குரு பகவான் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு சொல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார்.

குருபகவான் கடந்த டிசம்பர் 31ம் தேதி அன்று வக்கிர நிவர்த்தி அடைந்தார். தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான் தனது நேரான பயணத்தை தொடங்கியுள்ளார். இது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகளுக்கு சாதகமாக மாறி உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

குருபகவான் உங்கள் ராசிகள் முதல் வீட்டில் நேரான பயணத்தை தொடங்கியுள்ளார். அதனால் உங்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் விலகும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். அலட்சியம் காட்டினால் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

ரிஷப ராசி

 

குருபகவான் உங்கள் ராசியில் பன்னிரண்டாவது வீட்டில் நேரான பயணம் செய்து வருகின்றார். உங்களுக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் இருந்து சிக்கல்கள் அனைத்தும் விலகும். பண சிக்கல்கள் அனைத்தும் விலகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

சிம்ம ராசி

 

குருபகவான் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிக்கல்கள் குறையும். அனைத்தும் காரியங்கள் வீட்டில் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. மன தைரியம் அதிகரிக்கும். தைரியத்தால் பல்வேறு விதமான சிரமமான காரியங்கள் முடிவடையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.