தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Budhan Luck: புதன் பொங்கல் வைக்க போகிறார்.. பணத்தில் விளையாடுவது நீங்கதான்.. அந்த ராசிகள் யார்?

Budhan Luck: புதன் பொங்கல் வைக்க போகிறார்.. பணத்தில் விளையாடுவது நீங்கதான்.. அந்த ராசிகள் யார்?

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 03, 2024 03:32 PM IST

Lord Mercury: மே மாத இறுதியில் மே 31ஆம் தேதி அன்று சுக்கிர பகவானின் ரிஷப ராசிக்குள் புகுந்தார். சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாக விளங்கும் ரிஷப ராசியில் புதன் பகவான் புகுந்த காரணத்தினால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை ருசிக்க போகின்றன.

புதன் பொங்கல் வைக்க போகிறார்.. பணத்தில் விளையாடுவது நீங்கதான்.. அந்த ராசிகள் யார்?
புதன் பொங்கல் வைக்க போகிறார்.. பணத்தில் விளையாடுவது நீங்கதான்.. அந்த ராசிகள் யார்?

புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனத்தை இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். புதன் பகவான் மீன ராசியில் பயணம் செய்து வந்தார் கடந்த மே பத்தாம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைந்தார்.

அதற்கு பிறகு மே மாத இறுதியில் மே 31ஆம் தேதி அன்று சுக்கிர பகவானின் ரிஷப ராசிக்குள் புகுந்தார். சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாக விளங்கும் ரிஷப ராசியில் புதன் பகவான் புகுந்த காரணத்தினால் அதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை ருசிக்க போகின்றன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இன்று காணலாம்.

ரிஷப ராசி

உங்கள் ராசியில் முதல் வீட்டில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு ஆளுமை திறன் அதிகரிக்கும். எடுக்க முடிவுகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். கூட்டு தொழில் முயற்சிகள் வெற்றியை தேடி தரும். நல்ல முன்னேற்றம் உங்களுக்கு இருக்கும்.

மிதுன ராசி

உங்கள் ராசியில் 12-வது வீட்டில் புதன் பகவான் பயணம் செல்கின்றார். இதனால் உங்களுக்கு நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வேலை தொடர்பான பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.

கடக ராசி

உங்கள் ராசியில் 11வது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி ரீதியாக நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் உங்களுக்கு அதிகரிக்கக்கூடும். பேச்சு திறமையால் அனைத்து காரியங்களும் உங்களுக்கு ஏற்றவாறு முடிவடையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel