தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Raja Yoga Luck: புதன் வலை விரித்து விட்டார்.. பணத்தில் சிக்கி தவிக்கப் போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் தேடி வருது

Raja Yoga Luck: புதன் வலை விரித்து விட்டார்.. பணத்தில் சிக்கி தவிக்கப் போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் தேடி வருது

Suriyakumar Jayabalan HT Tamil
May 22, 2024 03:49 PM IST

Lord Mercury: மே மாதம் 31ஆம் தேதி அன்று ரிஷப ராசிக்குள் நுழைகிறார் இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும். ரிஷப ராசியில் புதன் பகவானின் பயணம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்ட யோகத்தை பெறுகின்றனர்.

புதன் வலை விரித்து விட்டார்.. பணத்தில் சிக்கி தவிக்கப் போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் தேடி வருது
புதன் வலை விரித்து விட்டார்.. பணத்தில் சிக்கி தவிக்கப் போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் தேடி வருது

புதன் பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அறிவு சம்பந்தப்பட்ட அனைத்து விதமான யோகங்களையும் கொடுப்பார் என ஜோதிட சாஸ்திரமும் கூறுகிறது. மீன ராசிகள் பயணம் செய்து வந்த புதன் பகவான் மே பத்தாம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைந்தார்.

அதற்குப் பிறகு மே மாதம் 31ஆம் தேதி அன்று ரிஷப ராசிக்குள் நுழைகிறார் இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும். ரிஷப ராசியில் புதன் பகவானின் பயணம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்ட யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசிகள் முதல் வீட்டில் புதன் பகவான் பயணம் செல்ல உள்ளார். இதனால் உங்களுக்கு ஆளுமை திறன் அதிகரிக்கும். எடுக்க முடிவுகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். கூட்டு தொழில் முயற்சிகள் வெற்றியில் முடியும். தொழில் சார்ந்து வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல வருமானம் உண்டாகும்.

மிதுன ராசி

 

உங்கள் ராசியில் 12-வது வீட்டில் புதன் பகவான் பயணம் செல்ல உள்ளார். இதனால் உங்களுக்கு நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அதிரசத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வியாபாரத்தில் பணம் அதிகரிக்கும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வேலை தொடர்பான பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கடக ராசி

 

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் புதன் பகவான் பயணம் செல்ல உள்ளார். இதனால் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சிறப்பான பலன்கள் உங்களை தேடி வரும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியாக முடிவடையும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். மனதில் தைரியம் மற்றும் வலிமை அதிகரிக்கும். பேச்சு திறமையால் பல காரியங்கள் உங்களுக்கு வெற்றியாக அமையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel