தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Attack: பணத்தில் பறக்க போகும் ராசிகள்.. குரு விபரீத ராஜயோகம் உருவாக்கியுள்ளார்.. ராஜயோகத்தை அனுபவிக்கும் ராசிகள்

Guru Attack: பணத்தில் பறக்க போகும் ராசிகள்.. குரு விபரீத ராஜயோகம் உருவாக்கியுள்ளார்.. ராஜயோகத்தை அனுபவிக்கும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
May 30, 2024 01:09 PM IST

Guru Attack: குரு பகவான் இருந்த இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும் குருபகவானின் இடமாற்றம் விபரீத ராஜயோகத்தை உருவாக்கியுள்ளது. குரு பகவானின் ரிஷப ராசி பயனத்தால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் இருக்கும்.

பணத்தில் பறக்க போகும் ராசிகள் குரு விபரீத ராஜயோகம் உருவாக்கியுள்ளார்.. ராஜயோகத்தை அனுபவிக்கும் ராசிகள்
பணத்தில் பறக்க போகும் ராசிகள் குரு விபரீத ராஜயோகம் உருவாக்கியுள்ளார்.. ராஜயோகத்தை அனுபவிக்கும் ராசிகள்

இந்த ஆண்டு மிகப்பெரிய கிரகங்களின் மாற்றமாக குரு பகவானின் இடமாற்றம் நிகழ்ந்துள்ளது. மேஷ ராசிகள் பயணம் செய்து வந்த குரு பகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசியில் நுழைந்தார். அது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும்.

குரு பகவான் இருந்த இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும் குருபகவானின் இடமாற்றம் விபரீத ராஜயோகத்தை உருவாக்கியுள்ளது. குரு பகவானின் ரிஷப ராசி பயனத்தால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

துலாம் ராசி

உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் குருபகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு விபரீத ராஜயோகம் கிடைத்துள்ளது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆடம்பர வாழ்க்கை உங்களைத் தேடி வரும். வருமானத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தொழில் ரீதியாக உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

தனுசு ராசி

உங்கள் ராசியில் ஆறாவது பெட்டில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு இந்த ஆண்டு சிறப்பான காலமாக இருக்கும். விபரீத ராஜ யோகத்தால் உங்களுக்கு நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சிக்கிக்கிடந்த பணம் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். சொத்துக்கள் வாங்குவதற்கான சூழ்நிலைகள் அமையும்.

கடக ராசி

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு விபரீத ராஜயோகம் கிடைத்துள்ளது. வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். எடுத்துக் கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். குரு பகவானால் புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். புதிய முதலீடுகள் உங்களுக்கு மிகப்பெரிய லாபத்தை பெற்று தரும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel