தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will Find The Zodiac Signs That Are Going To Face Problems Due To The Transit Of Mercury

Budhan 2024: புதனிடம் சிக்கிக் கொண்ட ராசிகள்.. கவனமாக இருக்க வேண்டிய காலம் இது

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 10, 2024 03:57 PM IST

புதன் இடப்பெயர்ச்சியால் சங்கடங்களை சந்திக்கப் போகும் ராசிகளை இங்கே காண்போம்.

புதன் இடப்பெயர்ச்சி
புதன் இடப்பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். தனுசு ராசியில் பயணம் செய்து வந்த புதன் பகவான் கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி அன்று சனி பகவானின் சொந்த ராசியான மகர ராசிக்குள் நுழைந்தார்.

புதன் பகவானின் இந்த இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். சனி மற்றும் புதன் பகவான் இருவரும் நட்பு கிரகமாக இருந்தாலும் சில ராசிகளுக்கு சாதகமற்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. அந்த வகையில் புதன் பகவானால் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகளை இங்கே காண்போம்.

கடக ராசி

 

புதன் பகவான் உங்கள் ஏழாவது வீட்டில் சஞ்சாரம் செய்து வருகின்றார். உங்களுக்கு செலவுகள் அதிகரிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மதிப்புமிக்க பொருட்களில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. உங்களது.

உடைமைகள் மீது நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை. வேலை செய்யும் இடத்தில் மன உளைச்சல் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். வியாபாரத்தில் சற்று மோசமான சூழ்நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. தொழிலில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் புதன் பகவான் சஞ்சாரம் செய்து வருகின்றார். உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. கடின உழைப்பு மட்டுமே உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது.

உயர் அலுவலர்களிடம் பேசும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். வீட்டில் சிக்கல்கள் ஏற்பட்டால் அமைதியாக இருப்பது நல்லது. புதன் பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமற்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.