தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  பண சூறாவளியில் சூரியன்.. ரிஷபத்தில் அமைந்த யோகம்.. பண மழை ராசிகள் இவங்கதான்..உங்க ராசி என்ன?

பண சூறாவளியில் சூரியன்.. ரிஷபத்தில் அமைந்த யோகம்.. பண மழை ராசிகள் இவங்கதான்..உங்க ராசி என்ன?

Suriyakumar Jayabalan HT Tamil
May 21, 2024 01:52 PM IST

Lord Sun: மேஷ ராசியில் பயணம் செய்து வந்த சூரிய பகவான் கடந்த மே மாதம் 14 ஆம் தேதி அன்று ரிஷப ராசிக்குள் சென்றார். இதனால் வைகாசி மாதம் பிறந்தது. இதே ராசியில் 30 நாட்கள் சூரிய பகவான் பயணம் செய்ய உள்ளார்.

பண சூறாவளியில் சூரியன்.. ரிஷபத்தில் அமைந்த யோகம்.. பண மழை ராசிகள் இவங்கதான்..உங்க ராசி என்ன?
பண சூறாவளியில் சூரியன்.. ரிஷபத்தில் அமைந்த யோகம்.. பண மழை ராசிகள் இவங்கதான்..உங்க ராசி என்ன?

மேஷ ராசியில் பயணம் செய்து வந்த சூரிய பகவான் கடந்த மே மாதம் 14 ஆம் தேதி அன்று ரிஷப ராசிக்குள் சென்றார். இதனால் வைகாசி மாதம் பிறந்தது. இதே ராசியில் 30 நாட்கள் சூரிய பகவான் பயணம் செய்ய உள்ளார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

சூரியன் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நிதி ரீதியாக சிறப்பான பலன்கள் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். உங்களுக்கு பிடித்த விஷயங்கள் அனைத்தும் நடக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கப்போகும். தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசியில் சூரிய பகவான் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். மாணவர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும். போட்டி தேர்வுகளில் கலந்து கொண்டால் நல்ல பலன்கள் உண்டாகும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். சொந்த தொழில் செய்வதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சிறப்பான பலன்கள் உங்களைத் தேடி வரும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும்.

கடக ராசி

 

உங்கள் ராசியில் பதினோராவது வீட்டில் சூரிய பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வேலை செய்வதற்கான சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான பலன்கள் இருக்கும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். மற்றவர்களிடத்தில் மரியாதையை அதிகரிக்கும்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சூரியன் பயணம் செய்தவர். இதனால் வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களோடு உங்களுக்கு மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். நல்ல பெயர் மற்றும் அங்கீகாரம் கிடைக்கும். நீண்ட நாள் கனவு நிறைவேறும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel