தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  மீனத்தில் விளையாடத் தொடங்கினார் சுக்கிரன்.. உச்சத்திற்கு செல்லும் ராசிகள்.. பணமழை உறுதி

மீனத்தில் விளையாடத் தொடங்கினார் சுக்கிரன்.. உச்சத்திற்கு செல்லும் ராசிகள்.. பணமழை உறுதி

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 12, 2024 02:39 PM IST

Lord Venus: சுக்கிர பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

சுக்கிரன்
சுக்கிரன்

சுக்கிர பகவான் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவர். கடந்த மார்ச் 31ம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார். ஏற்கனவே இந்த ராசிகள் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற ஏப்ரல் 24ஆம் தேதி வரை இதே ராசியில் சுக்கிரன் பயணம் செய்வார்.

சுக்கிர பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மிதுன ராசி

 

சுக்கிரனின் இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். இந்த காலம் உங்களுக்கு அற்புதமான காலமாக அமையும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். ஆடம்பர வசதிகள் உங்களுக்கு உயரும்.

கடக ராசி

 

சுக்கிரனின் இடமாற்றம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். தொழில் மற்றும் வேலையில் முன்னேற்றம் ஏற்படும். நிதி நிலைமையில் உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் உண்டாகும். நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

சிம்ம ராசி

 

உங்களுடைய ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் ராகு சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் நிதி ஆதாயத்திற்கான உங்களைத் தேடி வரும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள் உங்களுக்கு மன மகிழ்ச்சி உண்டாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel