தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குருவோடு பறக்கும் சுக்கிரன் ராஜ வாழ்க்கையில் திரிகோண ராஜ யோகம்.. அதிர்ஷ்டம் வருகிறது

குருவோடு பறக்கும் சுக்கிரன் ராஜ வாழ்க்கையில் திரிகோண ராஜ யோகம்.. அதிர்ஷ்டம் வருகிறது

Suriyakumar Jayabalan HT Tamil
May 17, 2024 02:45 PM IST

Trikona Raja Yoga: மே 19ஆம் தேதி அன்று சுக்கிரன் தனது சுந்தர ராசியான ரிஷப ராசிக்கு உள் நுழைகிறார் இதனால் ஏற்கனவே ரிஷப ராசியில் பயணம் செய்து வரும். குரு பகவானோடு சுக்கிரன் இணைகிறார். இந்த இரண்டு கிரகங்களும் நட்பு கிரகங்கள் என்கின்ற காரணத்தினால் திரிகோண ராஜயோகம் உருவாகி உள்ளது.

குருவோடு பறக்கும் சுக்கிரன் ராஜ வாழ்க்கையில் திரிகோண ராஜ யோகம்.. அதிர்ஷ்டம் வருகிறது
குருவோடு பறக்கும் சுக்கிரன் ராஜ வாழ்க்கையில் திரிகோண ராஜ யோகம்.. அதிர்ஷ்டம் வருகிறது

நவகிரகங்களில் ஆடம்பரத்திற்காக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் ஆடம்பரம், அழகு, சொகுசு, காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். சுக்கிரன் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து யோகங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது.

மே 19ஆம் தேதி அன்று சுக்கிரன் தனது சுந்தர ராசியான ரிஷப ராசிக்கு உள் நுழைகிறார் இதனால் ஏற்கனவே ரிஷப ராசியில் பயணம் செய்து வரும். குரு பகவானோடு சுக்கிரன் இணைகிறார். இந்த இரண்டு கிரகங்களும் நட்பு கிரகங்கள் என்கின்ற காரணத்தினால் திரிகோண ராஜயோகம் உருவாகி உள்ளது. இந்த ராஜயோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

விருச்சிக ராசி

 

திரிகோண ராஜ யோகத்தால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. இதனால் உங்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும். வாழ்க்கை துணையால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். பல துறைகளில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குடும்பத்தில் இனிமையான பலன்கள் உண்டாகும்.

கடக ராசி

 

உங்களுக்கு கேந்திர திரிகோண ராஜ யோகம் சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. கடன் தொல்லைகள் மற்றும் பண சிக்கல்கள் அனைத்தும் விலகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத நேரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். எந்த வேலையை எடுத்தாலும் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். மற்றவர்களிடத்தில் மரியாதை இருக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.

சிம்ம ராசி

 

திரிகோண ராஜ யோகத்தால் உங்களுக்கு பல்வேறு விதமான வெற்றிகள் கிடைக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பாராட்டுக்கள் கிடைக்கும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். குடும்பத்தினர் ஆனால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel