தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Mars Rajayoga: தலைமேல் கொட்டப் போகும் பணம்.. குரு செவ்வாய் சேர்ந்து விட்டனர்.. யோக ராசிகள் நீங்கதான்

Guru Mars Rajayoga: தலைமேல் கொட்டப் போகும் பணம்.. குரு செவ்வாய் சேர்ந்து விட்டனர்.. யோக ராசிகள் நீங்கதான்

Suriyakumar Jayabalan HT Tamil
May 29, 2024 02:02 PM IST

Guru Mars Rajayoga: குரு செவ்வாய் இவர்களின் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் புதிய யோகத்தை உருவாக்கும். குரு மற்றும் செவ்வாய் 12 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று சேர்கின்றனர். இவர்களின் சேர்க்கையால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர்.

தலைமேல் கொட்டப் போகும் பணம்.. குரு செவ்வாய் சேர்ந்து விட்டனர்.. யோக ராசிகள் நீங்கதான்
தலைமேல் கொட்டப் போகும் பணம்.. குரு செவ்வாய் சேர்ந்து விட்டனர்.. யோக ராசிகள் நீங்கதான்

நவகிரகங்களில் மங்கள யோகத்தை கொடுக்கக்கூடிய நாயகனாக குருபகவான் விளங்கி வருகின்றார். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், அதிர்ஷ்டம், யோகம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். தற்போது மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறினார்.

செவ்வாய் பகவான் ஜூன் மாதத்தில் ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். அந்த வகையில் ரிஷப ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவானுடைய செவ்வாய் பகவான் இணைகின்றார். குரு செவ்வாய் இவர்களின் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் புதிய யோகத்தை உருவாக்கும். 

குரு மற்றும் செவ்வாய் 12 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று சேர்கின்றனர். இவர்களின் சேர்க்கையால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ரிஷப ராசி

உங்கள் ராசியில் முதல் வீட்டில் குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை நிகழ்கின்றது. இதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடும். சிக்கிக் கிடந்த பணம் உங்களைத் தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

மரியாதையும் மற்றும் கௌரவம் மற்றவர்களிடத்தில் அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்டத்திற்கு முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். குரு மற்றும் செவ்வாய் சேர்ந்து உங்களுக்கு அதிக அளவில் வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபத்தை கொடுக்க போகின்றன. எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும்.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வேலைகள் முடிவடையும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

கடக ராசி

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் உங்களுக்கு வருமானத்தில் அதிகரிப்பு இருக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மிகப்பெரிய அளவில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். 

பழைய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகளால் நல்ல செய்தி உங்களைத் தேடி வரும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel