மீனத்தில் பிரிந்த ராகு சூரியன்.. பொட்டி பொட்டியாக கொட்டும் பணம்.. ராஜ மழையில் நனையும் ராசிகள் இவர்கள்தான்!
Rahu and Surya: சூரியன் மற்றும் ராகு இருவரும் சேர்ந்து பயணம் செய்து வந்தனர். இப்போது அவர்களின் சேர்ந்த பயணம் முடிவுக்கு வருகிறது. ராகு மற்றும் சூரியன் இவர்களின் சேர்க்கை பிரிகின்ற காரணத்தினால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர்.

நவகிரகங்களில் அசுப கிரகமாக கருதப்படக் கூடியவர் ராகு பகவான். ராகு கேது எப்போதும் இணைபிரியா கிரகங்களாக விளங்கி வருகின்றனர். ராகு பகவான் 18 மாதங்களுக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். தனக்கென சொந்த ராசி இல்லாத கிரகமாக விளங்கி வருகின்றார். இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் மீன ராசியில் பயணம் செய்ய தொடங்கினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்.
இது போன்ற போட்டோக்கள்
May 15, 2025 05:00 AM'வெற்றி தேடி வரும்.. உழைப்பில் கவனம்' மேஷம் முதல் மீனம் வரையான ராசியினரே இன்று மே. 15 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க
May 14, 2025 08:05 PMகுரு பகவான் - சூரியன் ராசி மாற்றம்.. இந்த 4 ராசிக்காரர்களுக்கு பண மழை, வெற்றி உறுதி.. உங்க ராசி என்ன?
May 14, 2025 05:09 PMநாளைய ராசிபலன்: தடைகள் உடையுமா? செலவுகள் அதிகரிக்குமா? மேஷம் முதல் மீனம் வரை.. நாளை மே 15 உங்களுக்கு எப்படி இருக்கும்?
May 14, 2025 01:38 PMபணம் மூட்டைகளோடு குபேரன் வருகிறார்.. கொட்டி தீர்க்கப் போகும் ராசிகள்.. எது உங்க ராசி சொல்லுங்க?
May 14, 2025 10:32 AMதொழில் வளர்ச்சி, பதவி உயர்வு.. தொட்டதெல்லாம் வெற்றி.. குருவின் நட்சத்திரத்தில் புதன் சஞ்சாரத்தால் யாருக்கு ஜாக்பாட்!
May 14, 2025 10:05 AMசனி வச்சு செய்யப்போகும் ராசிகள்.. பண மூட்டைகள் கொட்டப் போகுது.. உங்க ராசி இதுல இருந்தா ஜாலிதான்!
நவகிரகங்களின் தலைவனாக விளங்கக்கூடியவர் சூரிய பகவான். இவர் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக விளங்கி வருகிறார். சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் ஒவ்வொரு முறையும் இடம் மாறும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. சூரிய பகவான் கடந்த மார்ச் 14ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார்.
ஏற்கனவே ராகு பகவான் இந்த ராசியில் பயணம் செய்து வருகின்றார். சூரியன் மற்றும் ராகு இருவரும் சேர்ந்து பயணம் செய்து வந்தனர். இப்போது அவர்களின் சேர்ந்த பயணம் முடிவுக்கு வருகிறது. ராகு மற்றும் சூரியன் இவர்களின் சேர்க்கை பிரிகின்ற காரணத்தினால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மீன ராசி
ராகு மற்றும் சூரியன் சேர்க்கை உங்கள் ராசியில் இதுவரை நிகழ்ந்து வந்தது. தற்போது அவர்கள் பெறுகின்ற காரணத்தினால் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும் உறவினர்களால் உதவி கிடைக்கும். தொழில் ரீதியாக முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.
கடக ராசி
ராகு சூரியா சேர்க்கை முடிவுக்கு வந்துவிட்ட காரணத்தினால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. நிதி ரீதியாக உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும் பணவரவு அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். பிள்ளைகளால் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். தேர்வில் மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்று முன்னேற்றத்தை பெறுவார்கள்.
மிதுன ராசி
ராகு சூரிய சேர்க்கை பிரிவுக்கு வருகின்ற காரணத்தினால் உங்களுக்கு வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். தொழிலில் வெற்றி கிடைக்கும். அதீத லாபம் உங்களுக்கு உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் நல்ல வளர்ச்சி கிடைக்கும். மேலும் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு மிகப்பெரிய லாபத்தை பெற்று தரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். இனிமேல் எடுத்த காரியம் அனைத்தும் வெற்றி அடையும். புதிய முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைவீர்கள். கணவன் மனைவிக்கு அன்பு அதிகரிக்கும். பொருளாதாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறைந்து நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
