தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குரு கூடை கூடையாக பணத்தைக் கொட்டுவார்.. பண ராசிகள்.. திருமண யோகம் வருகிறது.. வேலை கிடைக்கும்

குரு கூடை கூடையாக பணத்தைக் கொட்டுவார்.. பண ராசிகள்.. திருமண யோகம் வருகிறது.. வேலை கிடைக்கும்

Suriyakumar Jayabalan HT Tamil
May 21, 2024 03:58 PM IST

Guru Bhagavan: குரு பகவான் அஸ்தமனத்தில் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மந்தமான சூழ்நிலை உருவாக உள்ளது. ஜூன் மாத தொடக்கத்திலேயே குரு பகவான் உதயமாகின்றார். இதனால் எந்தெந்த ராசிகள் அதிரசத்தை பெறப்போகின்றனர் என்பது குறித்து இங்கு காணலாம்.

குரு கூடை கூடையாக பணத்தைக் கொட்டுவார்.. பண ராசிகள்.. திருமண யோகம் வருகிறது.. வேலை கிடைக்கும்
குரு கூடை கூடையாக பணத்தைக் கொட்டுவார்.. பண ராசிகள்.. திருமண யோகம் வருகிறது.. வேலை கிடைக்கும்

தேவர்கள் ராஜகுருவாக குரு பகவான் திகழ்ந்து வருகின்றார். இந்த ஆண்டு குரு பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக நிகழ்ந்துள்ளது. மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு குரு பகவான் இடம் மாறினார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் ரிஷப ராசிக்கு இடம் மாறிய அடுத்த இரண்டு நாட்களில் குரு பகவான் ரிஷப ராசியில் அஸ்தமனமானார்.

குரு பகவான் அஸ்தமனத்தில் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மந்தமான சூழ்நிலை உருவாக உள்ளது. ஜூன் மாத தொடக்கத்திலேயே குரு பகவான் உதயமாகின்றார். இதனால் எந்தெந்த ராசிகள் அதிரசத்தை பெறப்போகின்றனர் என்பது குறித்து இங்கு காணலாம்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசிகள் முதல் வீட்டில் குரு பகவான் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் முடிவடையும். ஜூன் மாதத்தில் இருந்து உங்களுக்கு வெற்றி கிடைக்கும். நிதி நிலைமைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றத்தை உங்களுக்கு குரு பகவான் கொடுப்பார். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். கூட்டுத்தொழில் முயற்சிகள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கடக ராசி

 

உங்கள் ராசியில் 11 வது வீட்டில் குரு உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு ஜூன் மாதத்தில் இருந்து அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கப்போகின்றது. நிலுவையில் உள்ள வேலைகள் உங்களுக்கு வெற்றிகரமாக முடிவடையும். வழக்கத்தை விட உங்களுக்கு சுறுசுறுப்பாக இருக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். சுப காரியங்கள் உங்கள் வீட்டில் நடக்க உள்ளது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று மாணவர்கள் வெற்றி காண்பார்கள்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் குருபகவான் உதயம் ஆகின்றார். இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வேலையை மாற்ற விரும்புவர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். ஜூன் மாதத்தில் இருந்து பண யோகம் உண்டாகும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து பணவரவு அதிகரிக்கப்படும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel