தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Guru Bhagavan: ரிஷபத்தில் கொட்டும் குரு.. பணத்தில் விளையாடப் போகும் ராசிகள்.. யோகத்தில் நுழைவது நீங்கள்தானா?

Lord Guru Bhagavan: ரிஷபத்தில் கொட்டும் குரு.. பணத்தில் விளையாடப் போகும் ராசிகள்.. யோகத்தில் நுழைவது நீங்கள்தானா?

Suriyakumar Jayabalan HT Tamil
May 29, 2024 03:48 PM IST

Lord Guru Bhagavan: குரு பகவான் ஜூன் மாத தொடக்கத்தில் உதயமாக்கின்றார். ரிஷப ராசியில் உதயமாகும். குரு பகவானின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் மூன்று ராசிகள் யோகத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றன.

ரிஷபத்தில் கொட்டும் குரு.. பணத்தில் விளையாடப் போகும் ராசிகள்.. யோகத்தில் நுழைவது நீங்கள்தானா?
ரிஷபத்தில் கொட்டும் குரு.. பணத்தில் விளையாடப் போகும் ராசிகள்.. யோகத்தில் நுழைவது நீங்கள்தானா?

குருபகவான் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் குரு பகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்குள் நுழைந்தார்.

அடுத்த இரண்டு நாட்களில் குரு பகவான் ரிஷப ராசியில் அஸ்தமனார். இருப்பினும் குரு பகவான் ஜூன் மாத தொடக்கத்தில் உதயமாக்கின்றார். ரிஷப ராசியில் உதயமாகும். குரு பகவானின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் மூன்று ராசிகள் யோகத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

உங்கள் ராசியில் முதல் வீட்டில் குருபகவான் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் நடக்கும். ஜூன் மாதத்தில் இருந்து எடுத்த காரியம் அனைத்தும் வெற்றி அடையும். நிதிநிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். எடுக்கக்கூடிய காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். கடின உழைப்பு நல்ல பலன்களைப் பெற்று தரும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

கடக ராசி

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் குருபகவான் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு ஜூன் மாதத்தில் இருந்து அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கப்போகின்றது. நிலவில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கப்படும். வழக்கத்தை விட உங்களுக்கு சுறுசுறுப்பு அதிகரிக்கும். 

நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். வீட்டில் மண்டலகாரியாமல் நடக்கும். மாணவர்கள் கல்விகள் சிறந்து விளங்குவார்கள். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். வெளிநாட்டில் படிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் குருபகவான் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். கல்வியில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். 

வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் கொஞ்சம் கொஞ்சமாக கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறைந்து முன்னேற்றம் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel