தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ஆடம்பர பணமழை வேண்டுமா!.. சுக்கிரன் கொட்டிக் கொண்டே வருகிறார்.. பண மழையில் குளிக்கப் போகும் ராசிகள்

ஆடம்பர பணமழை வேண்டுமா!.. சுக்கிரன் கொட்டிக் கொண்டே வருகிறார்.. பண மழையில் குளிக்கப் போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 28, 2024 11:48 AM IST

luxurious life: சுக்கிரன் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி அன்று மீன ராசியிலிருந்து மேஷ ராசியில் நுழைந்தார். மேஷ ராசியில் ஏற்கனவே குருபகவான் பயணம் செய்து வருகின்றார். அவரோடு தற்போது சுக்கிரன் இணைந்துள்ளார். சுக்கிரனின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

சுக்கிரன்
சுக்கிரன்

இந்நிலையில் சுக்கிரன் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி அன்று மீன ராசியிலிருந்து மேஷ ராசியில் நுழைந்தார். மேஷ ராசியில் ஏற்கனவே குருபகவான் பயணம் செய்து வருகின்றார். அவரோடு தற்போது சுக்கிரன் இணைந்துள்ளார். சுக்கிரனின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது உறுதி தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசிகள் 12 வது வீட்டில் சுக்கிரன் நுழைகின்றார். இவர் உங்கள் ராசியில் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். வெளியூர் பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். உறவினர்களால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். ஆனந்த செலவுகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்த காலம் உங்களுக்கு மிகவும் சாதகமாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அடைந்திருக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.

மிதுன ராசி

 

உங்கள் ராசியில் 11 வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்களோடு உங்களுக்கு இணக்கமான சூழ்நிலை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். பணவரவில் எந்த குறையும் இருக்காது.

சிம்ம ராசி

 

உங்கள் ராசிகள் ஒன்பதாவது வீட்டில் சித்திரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் அனைத்து காரியங்களிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை மற்றும் துணிச்சல் அதிகரிக்கக்கூடும். எடுத்த முடிவுகள் அனைத்தும் உங்களுக்கு பாராட்டுகளை பெற்று தரும் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு நன்மை செய்வதில் உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே உறவு நெருக்கமாகும். குழந்தைகளால் உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும்.

கன்னி ராசி

 

உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். பலர் உங்களுக்கு சிக்கல்களை கொடுக்க விரும்புவார்கள். நீதிமன்ற சிக்கல்கள் அனைத்தும் முடிவதற்கு சற்று தாமதமாகும் எனவே பேசி முடித்துக் கொள்வது நல்லது. பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்களை தற்போது கொஞ்சம் தள்ளி வைப்பது நல்லது. இல்லையென்றால் நிதி இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். கடன் சிக்கல்கள் ஏற்பட உங்களுக்கு அதிக வாய்ப்பு உள்ளது எச்சரிக்கையாக இருங்கள். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கப் கூடும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel