தொட்டுவிட்டார் புதன்.. இனி வக்கிர நிவர்த்தி பணமழை..3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வாழ்க்கை ஆரம்பம்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  தொட்டுவிட்டார் புதன்.. இனி வக்கிர நிவர்த்தி பணமழை..3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வாழ்க்கை ஆரம்பம்

தொட்டுவிட்டார் புதன்.. இனி வக்கிர நிவர்த்தி பணமழை..3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வாழ்க்கை ஆரம்பம்

Suriyakumar Jayabalan HT Tamil
Published May 03, 2024 10:30 AM IST

Lord Mercury: புதன் பகவானின் வக்ர நிவர்த்தி அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். புதன் பகவான் புத்திசாலித்தனம், அறிவு, பேச்சு, படிப்பு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்த வருகின்றார்.

புதன் பகவான்
புதன் பகவான்

இது போன்ற போட்டோக்கள்

நவகிரகங்களில் இளவரசனாக விரும்பக் கூடியவர் புதன் பகவான். நவகிரகங்களிலேயே இவர் தான் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் புதன் பகவான். முதன் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். மீன ராசியில் பயணித்து வரும் புதன் பகவான் வக்ர நிலையில் பயணம் செய்து வந்தார். கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி அன்று வக்ர நிவர்த்தி அடைந்தார்.

புதன் பகவானின் வக்ர நிவர்த்தி அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். புதன் பகவான் புத்திசாலித்தனம், அறிவு, பேச்சு, படிப்பு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்த வருகின்றார். இவருடைய வக்கிர நிவர்த்தி தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் ஏராளமான நல்ல பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

கடக ராசி

 

புதன் பகவான் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் வக்கிர நிவர்த்தி அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் முழுமையாக கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சி உண்டாகும் நல்ல நேரம் உங்களுக்கு வந்துவிட்டது செலவுகள் குறையும். பணம் வரவு அதிகரிக்க கூடும். சிக்கி கடந்த பணம் உங்களைத் தேடி வரும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். உண்டாகும் பயணங்கள் நல்ல பலன்களை பற்றி தரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு கிடைக்கும். அனைத்து வேலைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கக்கூடிய சூழ்நிலைகள் அமையும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

கும்ப ராசி

 

உங்கள் ராசிகள் இரண்டாவது வீட்டில் புதன் வக்கிரன் படுத்தி அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு பணவரவில் எந்த குறையும் இருக்காது. நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குழந்தைகளால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். நல்ல லாபம் கிடைக்கும் தன்னம்பிக்கை அதிகரிக்கப்படும். பேச்சு திறமையால் வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9