தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will Find The Zodiac Signs That Are Going To Enjoy Luck Due To Jupiter And Venus Combination

குரு சுக்கிரன் மகிழ்ச்சி யோகம்.. வந்துவிட்டது திருமண யோகம்.. அப்படியே அள்ளப்போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 28, 2024 04:52 PM IST

Transit of Venus: குரு மற்றும் சுக்கிரன் வரும் ஏப்ரல் 24ஆம் தேதி அன்று இணைய உள்ளனர். இவர்களுடைய சேர்க்கை மேஷ ராசியில் நடக்க உள்ளது. இதனால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அள்ளப் போகின்றனர்.

குரு சுக்கிரன்
குரு சுக்கிரன்

ட்ரெண்டிங் செய்திகள்

ஆண்டிற்கு ஒருமுறை குரு பகவான் தனது இடத்தை மாற்றுவார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குருபகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் மே ஒன்றாம் தேதியன்று ரிஷப ராசிக்கு இடமாகிறார்.

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான் இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், சொகுசு, காதல், வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர் சுக்கிரன் இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

குரு மற்றும் சுக்கிரன் வரும் ஏப்ரல் 24ஆம் தேதி அன்று இணைய உள்ளனர். இவர்களுடைய சேர்க்கை மேஷ ராசியில் நடக்க உள்ளது. இதனால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அள்ளப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

குரு மற்றும் சுக்கிரன் உங்களுக்கு சுப பலன்களை கொடுக்கப் போகின்றனர். வாழ்க்கையில் ஏற்பட்ட வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

ரிஷப ராசி

 

சுக்கிரன் மற்றும் குரு உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றனர். நல்ல செய்தி உங்களை தேடி வரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தோடு சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும்.

கடக ராசி

 

குரு மற்றும் சுக்கிரன் உங்களுக்கு நன்மைகளை கொடுக்கப் போகின்றனர். வீடு வசதிகள் ஆடம்பரம் என அனைத்தும் உங்களுக்கு அதிகரிக்க போகின்றது. கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். உடன் பிறந்தவர்களால் உதவி கிடைக்கும். நண்பர்களால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். வருமானத்தில் எதிர்பாராத நேரத்தில் முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

துலாம் ராசி

 

சுக்கிரன் மற்றும் குரு சேர்க்கை உங்களுக்கு ராஜ வாழ்க்கையை கொடுக்கப் போகின்றது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வேலைகள் முடிவடையும். வாழ்க்கையில் பல்வேறு விதமான மாற்றங்கள் உண்டாகும். ஆடம்பரத்திற்கு இந்த குறையும் இருக்காது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel