தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will Find The Zodiac Signs That Are Going To Enjoy Good Luck Due To The Entry Of Aquarius Lord Mars

கும்பத்தில் புகுந்தார் செவ்வாய்.. சனியோடு கூட்டணி.. அதிர்ஷ்டம் கொட்டும்.. ராஜ வாழ்க்கை இவர்களுக்கு தான்.

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 03, 2024 04:03 PM IST

lord Mars: செவ்வாய் பகவான் கும்ப ராசியில் நுழைந்ததால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் ராஜ வாழ்க்கையை பெறப்போகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

செவ்வாய் பெயர்ச்சி
செவ்வாய் பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

நவகிரகங்களில் கர்மநாயகனாக விளங்க கூடியவர் சனிபகவான். இவர் ஏற்கனவே கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இது அவருடைய சொந்தமான ராசி ஆகும் இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். மார்ச் 15ஆம் தேதி அன்று செவ்வாய் பகவான் சனி பகவானோடு இணைந்தார்.

செவ்வாய் பகவான் கும்ப ராசியில் நுழைந்ததால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் ராஜ வாழ்க்கையை பெறப்போகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

ரிஷப ராசி

 

செவ்வாய் பகவானால் உங்களுக்கு நன்மை கிடைக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான பலன்கள் உண்டாகும். உறவினர்களால் உங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும்.

விருச்சிக ராசி

 

உங்களுக்கு சாதகமான பலன்களை செவ்வாய் பகவான் கொடுக்கப் போகின்றார். உங்கள் ராசியின் அதிபதியாக செவ்வாய் பகவான் திகழ்ந்து வருகின்றார். உங்களுடைய ராசியில் நான்காவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும் குடும்பத்தில் அமைதி அதிகரிக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். மருத்துவமனையில் வேலை செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

தனுசு ராசி

 

செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. உங்களுடைய ராசியில் மூன்றாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். உங்களுக்கு தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். செல்வம் பெருகும். பணம் சேமிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். குழந்தைகளால் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறைந்து பண வரவு அதிகமாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel