தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Sani: சனி விடாமல் பெய்யும் பணமழை.. கதவை திறந்து வைக்க வேண்டிய ராசிகள்.. இதில் உங்கள் ராசி இருக்கா?

Lord Sani: சனி விடாமல் பெய்யும் பணமழை.. கதவை திறந்து வைக்க வேண்டிய ராசிகள்.. இதில் உங்கள் ராசி இருக்கா?

Suriyakumar Jayabalan HT Tamil
May 25, 2024 10:45 AM IST

Lord Sani: சனி பகவான் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்ற வரும் ஜூன் 29ஆம் தேதி அன்று கும்ப ராசியை சனி பகவான் வக்கிர பெயர்ச்சி அடைகிறார். இதன் தாக்கம் கட்டாயம் 12 ராசிகளுக்கும் இருக்கும்.

சனி விடாமல் பெய்யும் பணமழை.. கதவை திறந்து வைக்க வேண்டிய ராசிகள்.. இதில் உங்கள் ராசி இருக்கா?
சனி விடாமல் பெய்யும் பணமழை.. கதவை திறந்து வைக்க வேண்டிய ராசிகள்.. இதில் உங்கள் ராசி இருக்கா?

சனிபகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்து. நீதிமானாக விளங்கக்கூடிய சனி பகவான் தற்போது கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். இது இவருடைய சொந்தமான ராசியாக 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ராசியில் பயணம் செய்து வருகிறார். 

இந்த 2024 ஆம் ஆண்டு முழுவதும் இதே ராசியில் சனி பகவான் பயணம் செய்வார். அதனால் இந்த ஆண்டு அவருடைய ஆண்டாக கருதப்படுகிறது. சனி பகவானின் ஒவ்வொரு அசைவும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

சனிபகவான் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்ற வரும் ஜூன் 29ஆம் தேதி அன்று கும்ப ராசியை சனி பகவான் வக்கிர பெயர்ச்சி அடைகிறார். இதன் தாக்கம் கட்டாயம் 12 ராசிகளுக்கும் இருக்கும். ஒரு சில ராசிகளுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

சனிபகவானின் வக்கிர பெயர்ச்சி உங்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களால் பாராட்டுக்கள் கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். 

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். சக ஊழியர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். வசதி வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

ரிஷப ராசி

சனி பகவானின் இந்த வக்கிர பெயர்ச்சி உங்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். பல்வேறு விதமான சிரமங்கள் உங்களை விட்டு விலகும். எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தேடி தரும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

உயர் அலுவலர்களால் உங்களுக்கு நம்பிக்கை கிடைக்கும். சனி பகவானால் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கக்கூடும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும். வெளிநாடு பயணங்கள் செய்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். அதிர்ஷ்டத்தில் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.

கன்னி ராசி

சனி பகவானின் வக்கிர பெயர்ச்சி உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்கப் போகின்றது. உயர் அலுவலர்களுடன் உங்களுக்கு நல்ல உறவு உண்டாகும். இந்த காலகட்டத்தில் உங்களது திறமையை அதிகமாக மேம்படுத்த முடியும். அனைத்து துறைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். 

ஒரே நேரத்தில் அனைத்து பணிகளையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபார வாழ்க்கையில் உங்களுக்கு மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும் வருமானம் அதிகரிக்கப்படும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான சூழ்நிலை உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel