தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will Find The Zodiac Signs That Are Going To Enjoy Good Fortune Due To The Fact That Guru Bhagwan Enters Taurus

Guru Peyarchi 2024: குரு கொட்ட வருகிறார்.. 3 ராசிகளுக்கு பணமழை.. ராஜயோகம் வந்துவிட்டது.. அதிர்ஷ்ட ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 03, 2024 09:51 AM IST

Guru Bhagwan: குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற மே மாதம் முதல் தேதி ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். இது சுக்கிர பகவானின் சொந்த ராசியாகும்.

குரு பகவான்
குரு பகவான்

ட்ரெண்டிங் செய்திகள்

குரு இருக்கும் இடத்தை பொறுத்து நன்மை மற்றும் தீமைகள் கிடைக்கின்றது. மற்றபடி குரு பகவான் எப்போதும் அனைத்து ராசிகளுக்கும் நன்மைகளை செய்யக்கூடியவர். குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற மே மாதம் முதல் தேதி ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். இது சுக்கிர பகவானின் சொந்த ராசியாகும்.

குரு பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும். மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் யோகத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

குருபகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டில் பயணம் செய்யப் போகின்றார். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வேலைகள் முடிவடையும். நிதி நிலைமையில் முன்னேற்றம் உண்டாகும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் உங்களுக்கு கிடைக்கும். நிறைய பணம் சேமிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும்.

மகர ராசி

 

உங்கள் ராசிகள் ஐந்தாவது வீட்டில் குருபகவான் பயணம் செய்யப்போகின்றார். இதனால் உங்களுக்கு கனவுகள் நனவாகும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். திருமணமாகாதவர்களுக்கு உதவி திருமணம் கைகூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

கும்ப ராசி

 

உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் குருபகவான் பயணம் செய்ய உள்ளார். இதனால் நிதி நிலைமையில் நலம் முன்னேற்றம் இருக்கும். நிறைய பணம் சேமிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். திடீரென எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் நிவர்த்தி அடையும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வேலையில் சற்று கவனமாக இருப்பது நல்லது. குறிப்பாக வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel