தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Sani: சனி பொற்காசுகளோடு வருகிறார்.. பணம் மூட்டையை பிடிக்கப் போகும் ராசிகள்.. அதிர்ஷ்ட யோகம் கொண்டவர் நீங்களா?

Lord Sani: சனி பொற்காசுகளோடு வருகிறார்.. பணம் மூட்டையை பிடிக்கப் போகும் ராசிகள்.. அதிர்ஷ்ட யோகம் கொண்டவர் நீங்களா?

Suriyakumar Jayabalan HT Tamil
May 24, 2024 05:50 PM IST

Lord Sani Vakra Transit: சனிபகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஜூன் மாதம் 30 ஆம் தேதி அன்று வக்கிர பெயர்ச்சி அடைகிறார்.

சனி பொற்காசுகளோடு வருகிறார்.. பணம் மூட்டையை பிடிக்கப் போகும் ராசிகள்.. அதிர்ஷ்ட யோகம் கொண்டவர் நீங்களா?
சனி பொற்காசுகளோடு வருகிறார்.. பணம் மூட்டையை பிடிக்கப் போகும் ராசிகள்.. அதிர்ஷ்ட யோகம் கொண்டவர் நீங்களா?

சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். கர்ம வினைகளை திருப்பி கொடுக்கின்ற காரணத்தினால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். 

30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் சனி பகவான் தற்போது பயணம் செய்து வருகிறார். இந்த ஆண்டு முழுவதும் இதே ரசிகர்கள் பயணம் செய்வார். அதனால் இந்த ஆண்டு சனி பகவானின் ஆண்டாக கருதப்படுகிறது.

சனிபகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஜூன் மாதம் 30 ஆம் தேதி அன்று வக்கிர பெயர்ச்சி அடைகிறார். இதனால் ஒரு சில ராசிகளுக்கு முழுமையான அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

சனி வக்கிர பெயர்ச்சி உங்களுக்கு அற்புதமான நல்ல பலன்களை கொடுக்கின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் செலுத்துவார்கள். 

உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்களால் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பணவரவில் எந்த குறைவும் இருக்காது. நிதி நிலைமையில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.

மிதுன ராசி

சனிபகவானின் வக்கிர பெயர்ச்சி உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. புதிய முயற்சிகள் உங்களுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. பல்வேறு விதமான வழிகளில் இருந்து உங்களுக்கு பணவரவு இருக்கும். 

தடைபட்ட காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு விரைவில் முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்களால் ஆதரவு உண்டாகும். நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். குழந்தைகளால் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும்.

சிம்ம ராசி

சனி வக்கிர பெயர்ச்சி உங்களுக்கு நல்ல செய்திகளை கொண்டு வந்து சேர்க்கப்போகின்றது. வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள அவர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கப் போகின்றது. தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

பல்வேறு விதமான முன்னேற்றங்கள் உங்களுக்கு உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel