சூரியன் கொந்தளிக்கிறார்.. கஷ்டப்படப் போகும் ராசிகள்.. அதிரடி ஆட்டம் ஆரம்பம்..தப்பிக்கவே முடியாது
சூரிய பகவானின் சஞ்சாரம் ஆனது சில ராசிகளுக்கு நன்மைகளை தரும். அதே சமயம் சில ராசிகளுக்கு எதிர்மறையான பலன்களை கொடுக்கும். சூரியபகவானின் மீன ராசி சஞ்சாரமானது சில ராசிகளுக்கு சிக்கல்களை ஏற்படுத்த உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
![சூரிய பெயர்ச்சி சூரிய பெயர்ச்சி](https://images.livemint.com/img/2024/03/31/960x540/suriya_1711874736689_1711874743157.jpg)
நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவருடைய இடமாற்றத்தின் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. இவர் சிம்ம ராசி அதிபதியாக திகழ்ந்த வருகின்றார்.
சூரிய பகவான் இடமாற்றம் நவகிரகங்களில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இவருடைய இடமாற்றம் பலரது வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். நவகிரகங்களில் உச்சபட்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். சூரிய பகவான் கடந்த மார்ச் 14ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார். ஏற்கனவே மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். தற்போது ராகு பகவான் மற்றும் சூரிய பகவான் இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர்.
சூரிய பகவானின் சஞ்சாரம் ஆனது சில ராசிகளுக்கு நன்மைகளை தரும். அதே சமயம் சில ராசிகளுக்கு எதிர்மறையான பலன்களை கொடுக்கும். சூரியபகவானின் மீன ராசி சஞ்சாரமானது சில ராசிகளுக்கு சிக்கல்களை ஏற்படுத்த உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
கடக ராசி
சூரிய பகவானிடம் மாற்றம் உங்களுக்கு பாதகமாக அமைந்துள்ளது. நீங்கள் செய்யும் வேலையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வெளியே செல்லும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் சற்று மந்தமான சூழ்நிலை ஏற்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் சிக்கல்கள் ஏற்படக்கூடும். திருமண வாழ்க்கையில் துணையால் சிக்கல்கள் ஏற்படக்கூடும். எனவே எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மிகவும் பொறுமையாக இருந்தால் காரியத்தை சாதித்துக் கொள்ளலாம். வாழ்க்கைத் துணையோடு போராடுவதை நிறுத்திக் கொள்வது நல்லது.
துலாம் ராசி
சூரிய பகவானின் இடமாற்றம் உங்களுக்கு அதிருப்தியை கொடுக்கப் போகின்றது. பல்வேறு விதமான ஆசைகள் உங்களை சிக்கல்களை உட்படுத்தும். சில ஆசைகள் நிறைவேறாமல் போக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. புதிய முதலீடுகளை தற்போது தவிர்ப்பது நல்லது. புதிய வருமானம் கிடைப்பதற்கு சற்று தாமதமான சூழ்நிலை ஏற்படும். புதிய முதலீடுகளை ஆலோசனை இல்லாமல் செய்வது. நல்லதல்ல வியாபாரம் மற்றும் தொழில் பெரிய நஷ்டங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. செய்யும் செயலை சிந்தித்து செய்ய வேண்டும். புதிய திட்டங்களை தற்போது தவிர்ப்பது நல்லது.
தனுசு ராசி
சூரிய பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு கலவையான பலன்களை கொடுக்கப் போகின்றது. தனிப்பட்ட வாழ்க்கையை பொருத்தவரை உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். இல்லற வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உடன் பிறந்தவர்களால் சண்டை சச்சரவுகள் ஏற்படக்கூடும். பெற்றோருடன் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். சில விஷயங்களில் கடுமையான பாதிப்புகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
![Whats_app_banner Whats_app_banner](/_next/static/media/WhatsappChnlmob.efd407a6.png)