தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  கண்களில் ஆனந்த கண்ணீரைக் கொடுக்க போகும் செவ்வாய்.. ஜூன் முதல் பணமழை.. ஜாக்பாட் ராசிகள் நீங்களா?

கண்களில் ஆனந்த கண்ணீரைக் கொடுக்க போகும் செவ்வாய்.. ஜூன் முதல் பணமழை.. ஜாக்பாட் ராசிகள் நீங்களா?

Suriyakumar Jayabalan HT Tamil
May 22, 2024 12:00 PM IST

Lord Mars: செவ்வாய் பகவான் வருகின்ற ஜூன் மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசிக்கு செல்கிறார். ஒரு வருடத்திற்கு பிறகு இந்த ராசிக்கு செவ்வாய் பகவான் செல்கின்ற காரணத்தினால் இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும்.

கண்களில் ஆனந்த கண்ணீரைக் கொடுக்க போகும் செவ்வாய்.. ஜூன் முதல் பணமழை.. ஜாக்பாட் ராசிகள் நீங்களா?
கண்களில் ஆனந்த கண்ணீரைக் கொடுக்க போகும் செவ்வாய்.. ஜூன் முதல் பணமழை.. ஜாக்பாட் ராசிகள் நீங்களா?

இந்நிலையில் செவ்வாய் பகவான் வருகின்ற ஜூன் மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசிக்கு செல்கிறார். ஒரு வருடத்திற்கு பிறகு இந்த ராசிக்கு செவ்வாய் பகவான் செல்கின்ற காரணத்தினால் இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். செவ்வாய் பகவானால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டில் பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானம் அதிகரிக்க கூடும். எதிர்பாராத நேரத்தில் லாபம் கிடைக்கும். தொழிலில் உள்ள முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். திருமணம் ஆனவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடும். எடுத்த காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். திருமணமாகாதவர்களுக்கு விரைவு திருமணம் கைகூடும்.

மகர ராசி

 

உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றது. அதனால் உங்களுக்கு ஜூன் மாதத்தில் இருந்து யோகம் கிடைக்கப்போகின்றது. ஆடம்பர வசதிகள் மற்றும் லாபம் உங்களை தேடி வரும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். பரம்பரை சொத்துக்களால் உங்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கக்கூடும். பெற்றோரின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். பணவரவில் இருந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் ஏற்பட்ட வந்த சிக்கல்கள் அனைத்தும் குறைந்து சேமிப்பு அதிகரிக்கப்படும். வியாபாரம் மற்றும் தொழிலில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் ஜூன் மாதத்தில் இருந்து உங்களுக்கு யோகம் கிடைக்கப்போகின்றது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் உங்களுக்கு நடக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வேலைக்கான பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். போட்டி தேர்வுகளில் வெற்றி காண்பார்கள். மதிப்பெண்கள் சிறப்பாக இருக்கும். ஜூன் மாதத்தில் இருந்து உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கக்கூடும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel