தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  மேஷத்தில் வெடிவைத்த புதன்.. பணம் பிச்சுகிட்டு கொட்ட போகுது.. இந்த மாதம் முழுக்க அதிரடியாகும் ராசிகள்

மேஷத்தில் வெடிவைத்த புதன்.. பணம் பிச்சுகிட்டு கொட்ட போகுது.. இந்த மாதம் முழுக்க அதிரடியாகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
May 10, 2024 01:53 PM IST

Lord Mercury: பணவரவில் எந்த குறையும் இல்லாமல் இருக்கப் போகின்றது. ரிஷபத்திற்கு செல்லும் புதன் பகவானால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷத்தில் வெடிவைத்த புதன்.. பணம் பிச்சுகிட்டு கொட்ட போகுது.. இந்த மாதம் முழுக்க அதிரடியாகும் ராசிகள்
மேஷத்தில் வெடிவைத்த புதன்.. பணம் பிச்சுகிட்டு கொட்ட போகுது.. இந்த மாதம் முழுக்க அதிரடியாகும் ராசிகள்

புதன் பகவான் மீன ராசியில் பயணம் செய்து வந்தார். மே பத்தாம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைந்தார். வருகின்ற மே 31 ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். அன்றைய தினம் ரிஷப ராசிக்கு செல்கிறார். புதன் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். 

ஒரு சில ராசிகளுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகப் போகின்றது. பணவரவில் எந்த குறையும் இல்லாமல் இருக்கப் போகின்றது. ரிஷபத்திற்கு செல்லும் புதன் பகவானால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசியில் முதல் வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றார். எதனால் உங்களுக்கு பணவரவில் எந்த குறையும் இருக்காது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும் திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். கூட்டுத்தொழில் முயற்சிகளில் முன்னேற்றம் இருக்கும். உயர் அலுவலர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். பணவரத்திற்கு எந்த குறையும் இல்லாமல் இருக்கும்.

மிதுன ராசி

 

உங்கள் ராசியில் 12-வது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். அனைத்து வேலைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும் பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும் கடன் சிக்கல்களால் ஏற்பட்டு வந்த தொந்தரவுகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். தடைப்பட்டு கிடந்த பணம் உங்களை தேடி வரும்.

கடக ராசி

 

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களால் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கக்கூடும். பேச்சு திறமையால் உங்களுக்கு பல்வேறு விதமான வெற்றிகள் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel