தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will Find The Zodiac Signs That Are Going To Be Fully Blessed By Lord Mars

சனியோடு சேர்ந்த செவ்வாய்.. வேலையில் முன்னேற்றம்.. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி.. அதிர்ஷ்டம் கொட்ட போகுது.. ராஜராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 27, 2024 04:25 PM IST

Lord Mars: செவ்வாய் பகவான் கடந்த மார்ச் 15 ஆம் தேதி அன்று கும்ப ராசியில் நுழைந்தார். கும்ப ராசியில் ஏற்கனவே சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். அது சனி பகவானின் சொந்த ராசியாகும். சனி பகவானோடு தற்போது செவ்வாய் பகவான் இணைந்துள்ளார்.

செவ்வாய் பெயர்ச்சி
செவ்வாய் பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

செவ்வாய் பகவான் கடந்த மார்ச் 15 ஆம் தேதி அன்று கும்ப ராசியில் நுழைந்தார். கும்ப ராசியில் ஏற்கனவே சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். அது சனி பகவானின் சொந்த ராசியாகும். சனி பகவானோடு தற்போது செவ்வாய் பகவான் இணைந்துள்ளார். சனிபகவானும் செவ்வாய் பகவானும் சேர்ந்துள்ளதால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

செவ்வாய் பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். உங்களுடைய ராசிகள் கர்ம வீட்டில் அமர்ந்துள்ள காரணத்தினால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் மரியாதை அதிகரிக்கும். திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். பொறுமையாக இருந்தால் நன்மைகள் உண்டாகும்.

விருச்சிக ராசி

 

செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு ராஜயோகத்தை கொடுத்துள்ளது. உங்கள் ராசியின் அதிபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் அவர் பயணம் செய்து வருகின்றார். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பெற்றோரின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். குடும்பத்தின் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். பண வரவில் இருந்து குறையும் இருக்காது. நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகள் உங்களுக்கு ஏற்றவாறு நடக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

தனுசு ராசி

 

செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகத்தில் கொடுக்கப் போகின்றது. உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். மன தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். செல்வம் உங்களை வந்து சேரும். சேமிப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும்.. உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகளால் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். எந்த அளவிற்கு பணம் சேருகிறதோ அந்த அளவிற்கு சேமிப்பு அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் பண வரவில் எந்த குறையும் இருக்காது. தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel