Tamil News  /  Astrology  /  Here We Will Find The Zodiac Signs That Are Going To Be Affiliated By Lord Saturn

Sani: சனி புரட்டி எடுக்கப் போகின்றார்..3 ராசிகளுக்கு எச்சரிக்கை

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 10, 2024 05:50 PM IST

Saturn Transit: சனி பகவானால் கஷ்டத்தை அனுபவிக்க போகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

சனி பெயர்ச்சி
சனி பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் சனி பகவான் நல்ல நிலையில் இருந்தால் அவர்களுக்கு அனைத்துவித செல்வங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. மோசமான நிலையில் இருந்தால் உச்சகட்ட கொடூர பிரதிபலன்களை அனுபவிக்க வேண்டியது இருக்கும்.

சனி பகவான் தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்வார். வரும் பிப்ரவரி 11ஆம் தேதி அன்று கும்ப ராசியில் சனிபகவான் அஸ்தமனம் ஆகின்றார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

தனுசு ராசி

 

சனிபகவான் உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் அஸ்தமனம் ஆகின்றார். அதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிரமங்கள் கிடைக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். வசதி வாய்ப்புகள் மிகவும் குறையும். தன்னம்பிக்கையில் குறைவு ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு சாதகம் அற்ற சூழ்நிலை அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பல்வேறு விதமான தடைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வெளியூர் பயணங்கள் செல்வதை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

துலாம் ராசி

 

உங்கள் ராசிகள் ஐந்தாவது வீட்டில் சனிபகவான் அஸ்தமனம் ஆகின்றார். குழந்தைகளால் உங்களுக்கு சிக்கல் கல்வி ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தொழில் ரீதியாக பல்வேறு விதமான சங்கடங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களால் சிக்கல்கள் ஏற்படும். வியாபாரத்தில் சற்று மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நஷ்டம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.

கன்னி ராசி

 

உங்கள் ராசியில் சனி பகவான் ஆறாவது வீட்டில் அஸ்தமனம் ஆகின்றார். நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய தருணம் இது. தொழில் மற்றும் வியாபாரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் எடுக்கக்கூடிய பெரிய முடிவுகளை மிகவும் யோசித்து எடுக்க வேண்டும். மனம் தளர்ந்து முயற்சிகளை கைவிடாமல் தன்னம்பிக்கையோடு போராட வேண்டும். நிதி ரீதியாக மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கடன் வாங்கக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். மன அழுத்தம் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் வேலை செய்யும் இடத்தில் அமையும். எவரையும் நம்பாமல் ஆழமாக யோசித்து செயல்படுவது நல்லது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.