தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  கொட்டிக் கொடுக்கும் குரு.. பணமழை விடாமல் பெய்யும்.. அதிர்ஷ்டத்தில் நுழைய போகும் 3 ராசிகள்.. நீங்க என்ன ராசி

கொட்டிக் கொடுக்கும் குரு.. பணமழை விடாமல் பெய்யும்.. அதிர்ஷ்டத்தில் நுழைய போகும் 3 ராசிகள்.. நீங்க என்ன ராசி

Suriyakumar Jayabalan HT Tamil
May 17, 2024 11:18 AM IST

Guru Bhagavan: ஜூன் மாத தொடக்கத்தில் குரு பகவான் உதயமாக உள்ளார். அதற்கு பிறகு ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை பெறுகின்றனர். உதயமான பிறகு சிறப்பான பலன்கள் அனைத்து ராசிகளுக்கும் அதிகமாக கிடைக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர்.

கொட்டிக் கொடுக்கும் குரு.. பணமழை விடாமல் பெய்யும்.. அதிர்ஷ்டத்தில் நுழைய போகும் 3 ராசிகள்.. நீங்க என்ன ராசி
கொட்டிக் கொடுக்கும் குரு.. பணமழை விடாமல் பெய்யும்.. அதிர்ஷ்டத்தில் நுழைய போகும் 3 ராசிகள்.. நீங்க என்ன ராசி

தேவர்களின் குருவாக திகழ்ந்துவரும் குரு பகவான் மேஷ ராசியில் இருந்து கடந்த மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசியில் நுழைந்தார். அது சுக்கிர பகவான் ராசியாகும். அடுத்த இரண்டு நாட்களில் குரு பகவான் ரிஷப ராசியில் அஸ்தமனமானார். கிரகங்களின் அஸ்தமனம் எப்போதும் மந்தமான பலன்களை கொடுக்கும்.

ஜூன் மாத தொடக்கத்தில் குரு பகவான் உதயமாக உள்ளார். அதற்கு பிறகு ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை பெறுகின்றனர். உதயமான பிறகு சிறப்பான பலன்கள் அனைத்து ராசிகளுக்கும் அதிகமாக கிடைக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசியில் முதல் வீட்டில் குருபகவான் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் நடக்கும். ஜூன் மாதத்திற்கு பிறகு உங்களுக்கு சிறப்பான பலன்கள் இருக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைந்திருக்கும். கூட்டுத் தொழில் முயற்சிகள் நல்ல பலன்களை பெற்றுத் தரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

கடக ராசி

 

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் குரு பகவான் உதயமாகின்றார். ஜூன் மாதத்திற்கு பிறகு உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். நிதி நிலைமையில் நலம் முன்னேற்றம் இருக்கும். எடுத்த வேலைகள் அனைத்தும் வெற்றி அடையும். தன்னம்பிக்கை அதிகரிக்க கூடும். வழக்கத்தை விட உங்களுக்கு சுறுசுறுப்பான சூழ்நிலைகள் அமையும். நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். சுப காரியங்கள் வீட்டில் நடக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். வெளிநாட்டில் வேலை செய்வதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் குரு பகவான் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். ஜூன் மாதத்திற்கு பிறகு உங்களுக்கு அனைத்து ஆசைகளும் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளிநாட்டில் வேலை செய்வதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும் வியாபாரம் விரிவாகும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel