பெட்டியை எடுத்து வரும் புதன்.. பணமழை கொட்ட போகுது.. அதிர்ஷ்டம் வந்துவிட்டது.. ராஜராஜ ராசிகள் இவர்கள்தான்
Lord Mercury: புதன் பகவான் கடந்த மார்ச் 15ஆம் தேதி அன்று மீன ராசியில் உதயமானார். அதே நாளில் செவ்வாய் பகவான் கும்ப ராசியில் இடமாற்றம் செய்தார். பொதுவாக கிரகங்கள் உதயமானால் அவர்களுடைய பலம் அதிகரிக்கும். என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசியின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். புதன் பகவான் கல்வி, அறிவு, சுய அறிவு, பகுத்தறிவு, பேச்சு, நரம்பு வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
இது போன்ற போட்டோக்கள்
Apr 30, 2025 05:33 PMபாக்கியங்களை அள்ளிக் கொட்ட வரும் குரு.. மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் ராசிகள்.. பணக்கார யோகம் யாருக்கு?
Apr 30, 2025 01:58 PMகங்கா சப்தமி நாளில் உருவாகும் திரிபுஷ்கர, ரவி யோகம்.. வருமானம், நிதி நிலை மேம்பாடு பெறப்போகும் 5 ராசிகள் இதோ
Apr 30, 2025 10:15 AMகோடிகளில் நனைய போகும் ராசிகள்.. செல்வத்தால் நிரப்பப்போகும் குரு.. வந்துவிட்டது யோகம்!
Apr 30, 2025 07:30 AMகூரைய பிச்சுகிட்டு கொட்டும் பணமழை.. சூரியன் வேலை ஆரம்பம்.. 3 ராசிகள்.. உங்க ராசி என்ன?
Apr 30, 2025 05:00 AMஅட்சய திருதியையில் அதிர்ஷ்டம் யாருக்கு.. இன்று ஏப்.30, 2025 உங்களுக்கு சாதகமா.. பாதகமா.. ஜாக்பாட் யாருக்கு பாருங்க!
Apr 29, 2025 10:53 AMசனி இன்று நுழைகிறார்.. உத்திரட்டாதியில் பண யோகம் பொங்கும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா?
புதன் பகவானின் ராசி மாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அவருடைய ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். புதன் பகவானின் ஒவ்வொரு அசைவும் மிகவும் முக்கியமானது என்ன ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
அந்த வகையில் அஸ்தமன நிலையில் பயணம் செய்து வந்த புதன் பகவான் கடந்த மார்ச் 15ஆம் தேதி அன்று மீன ராசியில் உதயமானார். அதே நாளில் செவ்வாய் பகவான் கும்ப ராசியில் இடமாற்றம் செய்தார். பொதுவாக கிரகங்கள் உதயமானால் அவர்களுடைய பலம் அதிகரிக்கும். என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் புதன் பகவானின் உதயத்தால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகும் ராசிகளை இங்கே காண்போம்.
மேஷ ராசி
புதன் பகவான் உங்களுக்கு மன அழுத்தத்தில் இருந்து விடுதலையை கொடுக்கப் போகின்றார். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். உடன் இருப்பவர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.
ரிஷப ராசி
புதன் பகவானின் உதயத்தின் தாக்கம் உங்களுக்கு பண வரவை அதிகரிக்கப் போகின்றது. உங்கள் அறிவு திறமையால் பொருளாதார நிலைமை முன்னேற்றமடையும் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். புதிய நண்பர்கள் உங்களைத் தேடி வருவார்கள். பல நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். நோயால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
கன்னி ராசி
புதன் பகவானின் உதயம் உங்கள் வாழ்வை உயர்த்த போகின்றது. மேல் படிப்பிற்காக வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தின் சிக்கல்கள் அனைத்தும் விலகும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
துலாம் ராசி
புதன் பகவானின் உதயம் உங்களுக்கு மகிழ்ச்சியை அதிகரித்து தர போகின்றது. புதிதாக வீடு வாங்க நினைப்பவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். உடன் வேலை பார்ப்பவர்கள் உங்களுக்கு ஏற்றவாறு நடந்து கொள்வார்கள். தடைப்பட்டு கடந்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
விருச்சிக ராசி
புதன் பகவானின் உதய காலம் உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரப் போகின்றது. தற்போது உங்களுக்கு நேரம் சிறப்பாக அமைந்துள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். குழந்தைகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
