Lord Surya: ராஜயோகத்தை உருவாக்கிய சூரியன்.. அதிர்ஷ்டத்தில் அமரப்போகும் ராசிகள்
சூரிய பகவானால் சொர்க்க வாழ்க்கையை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.
நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். சூரிய பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை கொடுக்கும். சூரிய பகவானின் இடமாற்றத்தின் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. சூரிய பகவான் தற்போது சனி பகவானின் ராசியான கும்ப ராசியில் நுழைந்துள்ளார்.
ஏற்கனவே கும்ப ராசியில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். தற்போது சனி மற்றும் சூரியன் ஒன்று சேர்ந்துள்ளனர். அது மட்டும் அல்லாது சூரிய பகவானின் இரு பக்கங்களும் இரண்டு கிரகங்களான ராகு மற்றும் செவ்வாய் அமர்ந்துள்ளனர்.
இவர்கள் இருபுறமும் அமர்ந்து சூரிய பகவான் நடுவில் இருக்கின்ற காரணத்தினால் உபயாச்சாரி ராஜயோகம் உருவாக்கியுள்ளது. இந்த யோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் ஒரு சிலர் ராசிகளுக்கு ராஜயோகத்தை கொடுத்துள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காணலாம்.
மகர ராசி
சூரிய பகவான் இன் ராஜயோகம் உங்களுக்கு பயனுள்ளதாக அமையப் போகின்றது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் திடீரென பண வரவு அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது.
துலாம் ராசி
உங்களுக்கு சூரிய பகவான் சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். சக ஊழியர்கள் உங்களுக்கு ஏதுவாக நடந்து கொள்வார்கள்.
கும்ப ராசி
சூரிய பகவான் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொட்டப் போகின்றார். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவு திருமணம் கைகூடும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். வணிக ஒப்பந்தங்கள் உங்களுக்கு ஜாதகமாக முடிவடையும். பணம் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் குறையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பேச்சு திறமையால் காரியங்கள் உங்களுக்கு ஏற்றவாறு முடிவடையும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9