தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will Find The Zodiac Signs That Are Blessed By Lord Surya

Lord Surya: மறைந்திருக்கும் சனியோடு கைகோர்த்தார் சூரியன்.. கோடீஸ்வர யோகம் பெறும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 22, 2024 11:53 AM IST

Saturn Transit: சூரிய பகவானால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

சனி பெயர்ச்சி
சனி பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

சூரிய பகவான் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகிறார். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் பிப்ரவரி மாதம் 13ம் தேதி அன்று சூரிய பகவான் கும்ப ராசிக்குள் நுழைந்தார். கும்ப ராசி சனி பகவானின் சொந்த ராசியாகும். இந்த ராசியில் தற்போது சனி பகவான் பயணம் செய்து வருகின்றார்.

இந்நிலையில் சனி மற்றும் சூரியன் இவர்கள் இருவரும் ஒன்று சேர்கின்றனர். தந்தை மகன் கிரகங்களாக இருந்தாலும் இருவரும் எதிர் கிரகங்களாகவே பார்க்கப்படுகின்றனர். சூரிய பகவானின் இந்த இடமாற்றத்தால் மூன்று ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

சிம்ம ராசி

 

சூரிய பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. பணவரவில் இருந்து குறையும் இருக்காது. உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் சூரியன் சஞ்சாரம் செய்கின்றார். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய முயற்சிகள் உங்களுக்கு ஏற்றவாறு கைக்கூடும். கூட்டு வேலை முயற்சிகள் வெற்றி அடையும்.

தனுசு ராசி

 

சூரிய பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. உங்கள் ஜாதகத்தில் மூன்றாவது வீட்டை சூரிய பகவான் பார்க்கின்ற காரணத்தினால் உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்க கூடும். சொத்துக்களால் உங்களுக்கு ஆதாயம் உண்டாகும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்.

கும்ப ராசி 

 

சூரிய பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும் ஆளுமை திறன் அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்க கூடும். கல்வியில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். ஆன்மீக பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel