தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will Find The Zodiac Signs That Are Blessed By Lord Mars

Mars Rising: பணத்தில் உதிக்கும் செவ்வாய்..யோகராசிகள் இதோ

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 19, 2024 12:33 PM IST

செவ்வாய் பகவானால் அதிர்ஷ்ட வாழ்க்கையை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

செவ்வாய் பெயர்ச்சி
செவ்வாய் பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த வகையில் செவ்வாய் பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

செவ்வாய் பகவான் கடந்த ஜனவரி 17ஆம் தேதி அன்று தனுசு ராசியில் உதயமானார். வரும் பிப்ரவரி 5ஆம் தேதி வரை இதே நிலையில் இருப்பார். இவருடைய உதயத்தால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்டு சில ராசிகள் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி வரை இதே நிலையில் இருப்பார்.

இவருடைய உதயத்தால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் உதயமாகின்ற காரணத்தினால் உங்களுக்கு பல்வேறு விதமான காரியங்கள் அனுகூலமாக நடக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றி அடையும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். பல்வேறு விதமான புதிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் செவ்வாய் பகவான் உதித்து உள்ள காரணத்தினால் பெற்றோரின் உடல்நலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் சில சிக்கல்கள் ஏற்படும். கடினமாக உழைத்தால் நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கும்.

மிதுன ராசி

 

உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் செவ்வாய் உதிக்கின்றார். உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை உங்களால் உருவாக்கும். முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றங்கள் உருவாக்கும். வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

கடக ராசி

 

உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் செவ்வாய் பகவான் உதயமாகின்ற காரணத்தினால் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சிலை ஏற்றத்தாழ்வுகளை சந்திக்க நேரிடும். புதிய வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். செலவுகளை கட்டுப்பாடோடு வைத்துக் கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் எந்த குறையும் இருக்காது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.