Tamil News  /  Astrology  /  Here We Will Find The Zodiac Signs In Which The Combination Of Rahu And Mercury Is Going To Give Good Luck

Rahu and Mercury: ராகுவும் புதனும் கொட்டுவார்கள்.. அள்ளப் போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 10, 2024 05:05 PM IST

ராகு மற்றும் புதன் சேர்க்கை அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகும் ராசிகளை இங்கே காண்போம்.

ராகு மற்றும் புதன்
ராகு மற்றும் புதன்

ட்ரெண்டிங் செய்திகள்

கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியில் பயணம் செய்ய தொடங்கினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் கல்வி, அறிவு, செல்வம், புத்திக்கூர்மை, உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் புதன் பகவான்.

மீன ராசியில் பயணம் செய்து வரும் அதே நிலையில் வரும் மார்ச் மாதம் புதன் பகவான் மீன ராசியில் நுழைகின்றார். இதன் காரணமாக ராகு மற்றும் புதன் சேர்க்கை நிகழவுள்ளது. சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைகின்றனர். இதனால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

கும்ப ராசி

 

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் புதன் மற்றும் ராகு சேர்க்கை நிகழ்கின்றது. எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் உருவாகும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பேச்சு திறமையால் காரியங்கள் வெற்றி அடையும். கடன் சிக்கல்கள் அனைத்தும் விலகும்.

மிதுன ராசி

 

உங்கள் ராசிகள் பத்தாம் வகுப்பு வீட்டில் ராகு புதன் சேர்க்கை நிகழ உள்ளது. வியாபாரம் மற்றும் வேலைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். வணிகத்தில் நல்ல முடிவுகள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. பெற்றோரின் உறவு வலுவாகும். பரம்பரை சொத்துக்கள் உங்களுக்கு சாதகமாக வரும்.

கடக ராசி

 

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் ராகு புதன் சேர்க்கை நிகழ உள்ளது. இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக அமையும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களை தேடி வரும். திட்டமிட்ட காரியங்கள் நடக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். புதிய தொழில் தொடக்கம் முன்னேற்றத்தை பெற்று தரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.