தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சனி கும்ப ராசி விளையாட்டு ஆரம்பம்.. 2025 வரை பணமழை.. அதிர்ஷ்டம் தேடி வருகிறது..உங்க ராசி இதில் இருக்கா?

சனி கும்ப ராசி விளையாட்டு ஆரம்பம்.. 2025 வரை பணமழை.. அதிர்ஷ்டம் தேடி வருகிறது..உங்க ராசி இதில் இருக்கா?

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 02, 2024 01:54 PM IST

Sani Money Rain: சனி பகவான் மகர மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இந்நிலையில் சனி பகவான் வருகின்ற ஜூன் 29ஆம் தேதி அன்று கும்ப ராசியில் வக்கிர பயணத்தை மேற்கொள்கிறார்.

சனி கும்ப ராசி விளையாட்டு ஆரம்பம்.. 2025 வரை பணமழை.. அதிர்ஷ்டம் தேடி வருகிறது
சனி கும்ப ராசி விளையாட்டு ஆரம்பம்.. 2025 வரை பணமழை.. அதிர்ஷ்டம் தேடி வருகிறது

30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.

சனிபகவான் மகர மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இந்நிலையில் சனி பகவான் வருகின்ற ஜூன் 29ஆம் தேதி அன்று கும்ப ராசியில் வக்கிர பயணத்தை மேற்கொள்கிறார். சனிபகவானின் பின்னோக்கிய பயணமானது அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சாதகமான பலன்களை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

உங்கள் ராசிகள் சனி பகவானின் பின்னோக்கிய பயணம் மிகவும் சாதகமாக அமைந்துள்ளது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். நிலுவையில் உள்ள பணிகள் முடிவடையும். அனைத்து காரியங்களும் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். 

சக ஊழியர்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்பார்கள். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்களில் லாபம் ஈட்டக்கூடிய முன்னேற்ற வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.

ரிஷப ராசி

சனி பகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். பல்வேறு விதமான சிரமங்கள் உங்களுக்கு குறையும். புதிய முயற்சிகள் நல்ல பலன்களை பெற்று தரும். 

வாழ்க்கையில் திருப்தி அடையக்கூடிய வேலைகள் நடக்கும். உயர் அலுவலர்களின் நம்பிக்கையும் பாராட்டுகளையும் நீங்கள் பெறுவீர்கள். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளிநாட்டில் உங்களுக்கு வேலை கிடைப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

கன்னி ராசி

சனி பகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு பெற்று தரக்கூடும். உயர் அலுவலர்களிடம் உங்களுக்கு நல்ல உறவு ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய சூழ்நிலைகள் அமையும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். 

தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்க கூடும். எடுத்துக் கொண்ட காரியங்களில் உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel