தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will Find The Zodiac Signs In Which Lord Mars Will Give Auspicious Results

செவ்வாய் கொட்டும் யோகத்தில் நனைய போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 01, 2024 01:51 PM IST

Mars Transit: செவ்வாய் பகவான் சுப பலன்களை கொடுக்கப் போகும் ராசிகளை இங்கே காண்போம்.

செவ்வாய் பகவான்
செவ்வாய் பகவான்

ட்ரெண்டிங் செய்திகள்

செவ்வாய் பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 45 நாட்கள் எடுத்துக் கொள்கிறார். அப்போது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கம் இருக்கும். இவர் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக வருகின்றார். பிப்ரவரி 5ஆம் தேதி அன்று சனிபகவான் என்று ராசியான மகர ராசியில் நுழைந்தார்.

செவ்வாய் பகவான் மகர ராசியில் நுழைந்த காரணத்தினால் சுப மற்றும் அசுப பலன்கள் அனைத்து ராசிகளுக்கும் கிடைக்கும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் முழுமையான யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

செவ்வாய் பகவானின் பயணம் உங்களுக்கு நல்ல பலன்களை தரும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். மனதில் தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும் வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. புதிதாக சொத்துக்கள் சேர்ப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கடக ராசி

 

செவ்வாய் பகவான் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத நேரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் வியாபாரம் விரிவாகும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து முன்னேற்றம் கிடைக்கும்.

சிம்ம ராசி

 

செவ்வாய் பகவானால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைத்துள்ளது. இதுவரை நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் முடிவடையும் பணவரவில் எந்த குறையும் இருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் லாபங்கள் இரு மடங்காக இருக்கும். சேமிப்பு அதிகரிக்க கூடும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். மொத்தத்தில் இந்த காலம் உங்களுக்கு சிறப்பான காலமாக அமையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel