தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will Find The Zodiac Signs Blessed By Lord Venus

Sukra: மகாலட்சுமி யோகத்தை தரும் சுக்கிர பகவான்.. அதிர்ஷ்ட ராசிகள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 02, 2024 11:31 AM IST

சுக்கிர பகவானால் அதிர்ஷ்டத்தை பெற்ற ராசிகளை இங்கே காண்போம்.

சுக்கிர பெயர்ச்சி
சுக்கிர பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

சுக்கிர பகவான் மகிழ்ச்சி, செல்வம், செழிப்பு, ஆடம்பரம், பணம், வசதி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். தற்போது சுக்கிர பகவான் சனி பகவான் ராசியான மகர ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

மார்ச் 7ஆம் தேதி அன்று சனிபகவானின் ராசிக்கான கும்ப ராசியில் இடம் மாறுகிறார். மார்ச் 30ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். சுக்கிரனின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு இது சாதகமான காலமாக அமைந்துள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

சுக்கிரன் உங்களுடைய ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இவர் கும்ப ராசியில் நுழைவதால் உங்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது.

துலாம் ராசி

 

சுக்கிரனின் இடமாற்றம் உங்களுக்கு நல்ல நன்மைகளை பெற்றுத் தரப் போகின்றது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பெற்றோரால் மகிழ்ச்சி உண்டாகும். முன்னோர்களின் சொத்துக்களால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். எதிர்பாராத நேரத்தில் பண வரவு இருக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கடக ராசி

 

சுக்கிரனின் இடப்பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது. நண்பர்களால் உதவி கிடைக்கும்.

கும்ப ராசி

 

சுக்கிரனின் இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை தரப்போகின்றது. புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பணவரவு அதிகரித்து சேமிப்பு அதிகரிக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel