தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will Find The Zodiac Signs Blessed By Lord Venus

Sukra: சுக்கிரன் உச்சத்தில் வந்தார்.. அதிர்ஷ்ட ராசிகள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 08, 2024 02:31 PM IST

சுக்கிர பகவானால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

சுக்கிர பெயர்ச்சி
சுக்கிர பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

சுக்கிர பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. நவகிரகங்களின் இடமாற்றமும் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். அதேபோல சுக்கிர பகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.

கடந்த ஜனவரி 18ஆம் தேதி அன்று சுக்கிர பகவான் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்ய தொடங்கினார். இதனால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் மூன்று ராசிகளுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

சுக்கிரன் உங்கள் ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். உங்களுக்கு அனைத்து விதமான செல்வங்களையும் கொடுக்க போகின்றார். பணவரவில் எந்த குறையும் இருக்காது. வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய மதிப்பு அதிகரிக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்காத வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.

சிம்ம ராசி

 

சுக்கிரன் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். குடும்பத்தில் இருந்த மனக்கசப்புகள் தீரும். உறவுகள் நல்ல மேம்பாட்டை அடையும். எதிரிகளால் ஏற்பட்ட வந்த சிக்கல்கள் குறையும். தொழிலில் நல்ல யோகம் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. வியாபாரம் மற்றும் தொழில் விரிவுபடுத்தும் மாற்றங்கள் உண்டாகும்.

துலாம் ராசி

 

சுக்கிரன் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்ற பாதையை உருவாக்கியுள்ளார். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். உடன் பிறந்தவர்களால் மகிழ்ச்சி உண்டாகும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும். உணவு மற்றும் உடற்பயிற்சி மிகவும் முக்கியமாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.