தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will Find The Zodiac Signs Blessed By Lord Surya Bhagavan

Sun Transit: சூரியன் கொடுத்த யோகம்..சனி ராசியில் விழுந்தார்.. ஒன்று சேர்ந்த எதிர் கிரகங்கள்.. பணமழை உறுதி

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 12, 2024 05:01 PM IST

சனிபகவானின் சொந்த ராசியான கும்ப ராசியில் தற்போது சூரிய பகவான் நுழைந்துள்ளார். ஏற்கனவே சனிபகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். அதுமட்டுமில்லாமல் சூரிய பகவான் நுழைந்த பிறகு இரண்டு பக்கங்களிலும் ராகு மற்றும் செவ்வாய் 2 கிரகங்கள் அமர்ந்துள்ளனர். இதனால் உபயச்சாரி ராஜயோகம் உருவாகியுள்ளது.

சூரிய பெயர்ச்சி
சூரிய பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

சனிபகவானின் சொந்த ராசியான கும்ப ராசியில் தற்போது சூரிய பகவான் நுழைந்துள்ளார். ஏற்கனவே சனிபகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். அதுமட்டுமில்லாமல் சூரிய பகவான் நுழைந்த பிறகு இரண்டு பக்கங்களிலும் ராகு மற்றும் செவ்வாய் 2 கிரகங்கள் அமர்ந்துள்ளனர். இதனால் உபயச்சாரி ராஜயோகம் உருவாகியுள்ளது.

இந்த ராஜயோகம் 500 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகியுள்ள காரணத்தினால் இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மகர ராசி

 

உங்களுக்கு ராஜயோகம் கிடைத்துள்ளது. இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் தேடி வரும். பண ஆதாயத்திற்கான வாய்ப்புகள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. சொத்துக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

துலாம் ராசி

 

சூரிய பகவானின் ராஜயோகம் உங்களுக்கு வருமானத்தை அதிகரித்து கொடுக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வணிக ஒப்பந்தங்கள் வெற்றிகரமாக முடிவடையும். மேலும் நிலுவையில் இருந்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.

கும்ப ராசி

 

சூரிய பகவான் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுப்பார். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். தொழிலில் புதிய முடிவுகள் உங்களுக்கு முன்னேற்றத்தை கொடுக்கும். வணிக ஒப்பந்தங்களும் வெற்றிகரமாக முடிவடையும். பண சிக்கல்கள் நீங்கி நிதி நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும். உங்களது பேச்சுத் திறமையால் பல காரியங்கள் சாதகமாக முடிவடையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel