தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will Find The Zodiac Signs Blessed By Lord Saturn

Sani Peyarchi: சனி அஸ்தமனத்தால் பண மழையில் நனைந்து போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 23, 2024 10:58 AM IST

Saturn Transit: சனி பகவானால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

சனி பெயர்ச்சி
சனி பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். சனிபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். தற்போது சனி பகவான் கும்ப ராசிகள் பயணம் செய்து வருகின்றார்.

இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். சனிபகவான் மட்டுமல்லாது அனைத்து கிரகங்களும் தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். நவகிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து மிதமான செயல்பாடுகளும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் சனி பகவான் பிப்ரவரி 11ம் தேதி அன்று கும்ப ராசியில் அஸ்தமனமானார் மார்ச் 26 ஆம் தேதியன்று உதயம் ஆகின்றார். இது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மிதுன ராசி

 

உங்கள் சனிபகவான் ஒன்பதாவது வீட்டில் அஸ்தமனம் ஆகியுள்ளார். இதனால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். கூடுதல் வருமானம் வருவதற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மரியாதை அதிகரிக்கும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

கடக ராசி

 

சனிபகவான் உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் அஸ்தமனம் ஆகியுள்ளார். உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. வீட்டில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். புதிய வேலைவாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிய திட்டங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பண வரவில் இந்த குறையும் இருக்காது. மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலையில் அமைந்துள்ளது. இது உங்களது வெற்றியை அதிகப்படுத்தும் தொழிலில் நல்ல முயற்சி இருக்கும். வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் அமையும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel