Guru Month: குரு அள்ளிக் கொடுக்க தொடங்கி விட்டார்.. இந்த ராசிகள் உச்சம்தான்-here we will find the zodiac sign people who get raja yoga from guru bhagavan - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Month: குரு அள்ளிக் கொடுக்க தொடங்கி விட்டார்.. இந்த ராசிகள் உச்சம்தான்

Guru Month: குரு அள்ளிக் கொடுக்க தொடங்கி விட்டார்.. இந்த ராசிகள் உச்சம்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 22, 2024 06:30 AM IST

Guru Bhagavan: குரு பகவானால் ராஜ யோகத்தை பெறுகின்ற ராசிக்காரர்களை இங்கே காண்போம்.

குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சி

குரு பகவான் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக நவக்கிரகங்களில் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றுவார். அப்போது 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.

தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான். வக்ர நிவர்த்தி அடைந்து நேரான பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளின் காரணியாக திகழ்ந்து வருகிறார்.

குருபகவான் வரும் மே மாதம் முதல் தேதி மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமாக கருதப்பட்டாலும் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காண்போம்.

மேஷ ராசி

 

குருபகவான் உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளை கொடுக்கப் போகின்றார். அதிர்ஷ்டத்தின் சக்தி அதிகமாக இருக்கும். உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத நேரத்தில் பண வரவு இருக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் உங்களுக்கு கிடைக்கும். செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

கடக ராசி

 

அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்க உள்ளது. இந்த புத்தாண்டு உங்களுக்கு சிறப்பாக அமையும். வருமானம் அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய நிலை வலுவாக மாறும். புதிய திட்டங்கள் மிகப்பெரிய முன்னேற்றத்தை உண்டாக்கும். அனைத்து விதமான திட்டங்களும் வெற்றி அடையும்.

சிம்ம ராசி

 

குருபகவான் உங்களுக்கு சுப பலன்களை கொடுக்கப் போகின்றார். இந்த ஆண்டு உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆண்டாக அமையப் போகின்றது. வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிய முதலீடுகள் முன்னேற்றத்தை உண்டாக்கும். நிதி நிலைமையில் புதிய ஆதாயங்கள் உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். ஆராய்ச்சி தொழில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு நல்ல காலமாக அமையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9