Raja Yoga: அதிர்ஷ்டத்தை கொட்டும் சுக்கிரன்.. பண மழையில் நனையும் ராசிகள்
சுக்கிரனால் ராஜ யோகத்தை பெற்ற ராசிகளை இங்கே காண்போம்.
நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக் கூடியவர் சுக்கிர பகவான். இவர் சொகுசு, ஆடம்பரம், காதல், மகிழ்ச்சி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக இருந்து வருகிறார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
சுக்கிர பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரன் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் சுக்கிரன் தற்போது மகர ராசியில் பயணம் செய்து வருகிறார்.
இந்நிலையில் வரும் மார்ச் 7ஆம் தேதி அன்று சனிபகவான் ராசியான கும்ப ராசியில் பயணம் செய்ய உள்ளார். ஒரு மார்ச் 30ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
ரிஷப ராசி
சுக்கிர பகவான் உங்கள் ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இவரால் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கப் போகின்றது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வருமானம் அதிகரிக்கக்கூடும். நிதிநிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவில்லில் இருந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
துலாம் ராசி
சுக்கிரன் உங்களுக்கு அதிக நன்மைகளை கொடுக்கப் போகின்றார். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பெற்றோரால் மகிழ்ச்சி உண்டாகும். சொத்துக்களால் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் குறையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் விலகும்.
கடக ராசி
சுக்கிரன் உங்களுக்கு சாதகமாக செயல்பட்டு வருகின்றார். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9