புரட்டப் போகும் புதன்.. பண நஷ்டம் ஏற்படுமா?.. வேலை முக்கியம் குமாரு.. தப்பிக்க முடியாத ராசிகள் இவங்கதான்..
- Mercury Transit: புதன் பகவான் வக்ரம் அடைந்த காரணத்தினால் சில ராசிகளுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் தடைபடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சில சிக்கல்கள் ஏற்படக்கூடும். மேஷ ராசியில் வக்ரமடைந்த புதன் பகவானால் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து இங்கு காண்போம்.
- Mercury Transit: புதன் பகவான் வக்ரம் அடைந்த காரணத்தினால் சில ராசிகளுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் தடைபடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சில சிக்கல்கள் ஏற்படக்கூடும். மேஷ ராசியில் வக்ரமடைந்த புதன் பகவானால் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து இங்கு காண்போம்.
(1 / 6)
நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் பேச்சு புத்திசாலித்தனம், படிப்பு, வியாபாரம், உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் 27 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் புதன் பகவான். மிகவும் குறுகிய காலத்தில் தனது ராசியை மாற்றக்கூடியவர் இவர். மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார்.
(2 / 6)
ஒருவருடைய ஜாதகத்தில் புதன் பகவான் உச்ச நிலைமையில் இருந்தால் அவர்கள் தொழில் மற்றும் படிப்பில் சிறந்து விளங்குவார்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி அன்று புதன் பகவான் மேஷ ராசியில் நுழைந்தார். அதில் பயணம் செய்து வந்த புதன் பகவான் ஏப்ரல் இரண்டாம் தேதி என்று மேஷ ராசியில் வக்ரம் ஆனார்.
(3 / 6)
புதன் பகவான் வக்ரம் அடைந்த காரணத்தினால் சில ராசிகளுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் தடைபடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சில சிக்கல்கள் ஏற்படக்கூடும். மேஷ ராசியில் வக்ரமடைந்த புதன் பகவானால் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து இங்கு காண்போம்.
(4 / 6)
மேஷ ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் புதன் வக்ரமடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது.
(5 / 6)
ரிஷப ராசி: உங்கள் ராசியில் 12-வது வீட்டில் புதன் வக்ரம் அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு வேலையில் சிக்கல்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் பொறுமையாக இருக்க வேண்டும். நிறைய சவால்களை நீங்கள் சந்திக்க நேரிடும் நிதி ரீதியாக மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
(6 / 6)
கடக ராசி: உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் புதன் வக்ரமடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு செயல்திறன் மற்றும் தன்னம்பிக்கை குறையக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களோடு கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. கடின உழைப்பு உங்களுக்கு எந்த பலன்களையும் பெற்று தராது. பணிச்சுமை அதிகரிக்க கூடிய சூழ்நிலைகள் அமையும்.
மற்ற கேலரிக்கள்