தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will Find The Rasis Who Will Enjoy The Royal Life Given By Guru And Venus

குரு பண மழையில் சேர்ந்த சுக்கிரன்.. இரண்டு கிரக சேர்க்கை.. அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 31, 2024 04:20 PM IST

Guru and Venus: குரு மற்றும் சுக்கிரன் இவர்கள் இருவரும் ஒன்று சேரப் போகின்றனர். 12 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ஏப்ரல் 24ஆம் தேதி அன்று இவர்களுடைய சேர்க்கை மேஷ ராசியில் நிகழவுள்ளது. குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் ஏற்படும்.

குரு மற்றும் சுக்கிரன்
குரு மற்றும் சுக்கிரன்

ட்ரெண்டிங் செய்திகள்

நவகிரகங்களின் ஆடம்பர நாயகனாக விளங்கக்கூடியவர் சுக்கிர பகவான். இவர் செல்வம் செழிப்பு, சொகுசு, ஆடம்பரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.

குரு மற்றும் சுக்கிரன் இவர்கள் இருவரும் ஒன்று சேரப் போகின்றனர். 12 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ஏப்ரல் 24ஆம் தேதி அன்று இவர்களுடைய சேர்க்கை மேஷ ராசியில் நிகழவுள்ளது. குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் ஏற்படும். இருப்பினும் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கை உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கப் போகிறது. வெற்றிகள் உங்களைத் தேடி வரும். தொழிலில் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் திறமைகள் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் வளமும் அதிகரிக்கும்.

கடக ராசி

 

குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கை உங்களுக்கு நன்மைகளை கொடுக்கப் போகின்றது. வாழ்க்கையில் ஆடம்பரம் மற்றும் வசதிகள் உங்களுக்கு அதிகரிக்க போகிறது. கடின உழைப்பு நல்ல பலன்களை கொடுக்கும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். வருமானத்தில் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் இருக்கும். நண்பர்களால் ஆதரவு கிடைக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

துலாம் ராசி

 

குரு மற்றும் சுக்கிரன் இருவரும் சேர்ந்து உங்களுக்கு பல நன்மைகளை கொடுக்கப் போகின்றனர். காதல் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். ஆடம்பரத்தின் அனைத்து வசதிகளும் உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் உங்களைத் தேடி வரும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்கள் மீது நம்பிக்கை அதிகரிக்கும்.

தனுசு ராசி

 

குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. எதிர்பாராத நேரத்தில் வருமானம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கினால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். நீண்ட கால திட்டங்கள் தற்போது வெற்றியடையும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். நண்பர்களால் உங்களுக்கு மகிழ்ச்சியான தருணங்கள் அமையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel