தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will Find The Rasis Who Get Yogic Life Due To Saturn Rising

சனி அதிசயமானவர்.. அதிர்ஷ்டம் கொட்ட போகுது.. உதயத்தில் பணமழை.. ராஜயோக ராசிகள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 30, 2024 05:48 PM IST

Saturn rising: சனி பகவான் கடந்த மார்ச் 16ஆம் தேதி அன்று கும்ப ராசியில் உதயமானார். தற்போது அவரோடு செவ்வாய் மற்றும் சுக்கிரன் கூட்டணி சேர்ந்துள்ளனர். சனி பகவானின் உதயத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது.

சனிப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். சனி பகவான் சனி பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சனி பகவான் கர்மநாயகனாக திகழ்ந்து வருகின்றார்.

நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

சனி பகவான் கடந்த மார்ச் 16ஆம் தேதி அன்று கும்ப ராசியில் உதயமானார். தற்போது அவரோடு செவ்வாய் மற்றும் சுக்கிரன் கூட்டணி சேர்ந்துள்ளனர். சனி பகவானின் உதயத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

துலாம் ராசி

 

சனிபகவானின் முழு அருள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. இதுவரை ஏற்பட்டு வந்த கஷ்டங்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். நோய் குறைபாடுகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமண தடைகள் அனைத்தும் விலகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும் பண வரவு அதிகமாகும். பல்வேறு விதமான யோகங்கள் உங்களுக்கு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

விருச்சிக ராசி

 

உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் சனி பகவான் ஆட்சி செய்து வருகிறார். உங்களுக்கு சனி பகவானின் பத்தாவது பார்வை விழுகின்ற காரணத்தினால் இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். ஆசிகள் அனைத்தும் நிறைவேறும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். அர்த்தாஷ்டம சனி நடக்கின்ற காரணத்தினால் நீங்கள் மிகவும் கவனமாக இருப்பது நல்லது.

தனுசு ராசி

 

உங்களுக்கு ஏழரை சனி விலகி விட்டதால் இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறைந்து நன்மைகள் உண்டாகும். வராத பணம் உங்களைத் தேடி வரும். இதுவரை ஏற்பட்டு வந்த துன்பங்கள் அனைத்தும் குறையும். பயணங்கள் நல்ல பலன்களை தரும். மன நிம்மதி உங்களுக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். கடன் சிக்கல்கள் விலகும். பணவரவில் இருந்த குறையும் இருக்காது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel