தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குரு கிருத்திகை பெயர்ச்சி.. சுகமாக வாழப்போகும் ராசிகள்.. பண மழையில் நனைவது உறுதி.. கொட்டும் யோகம்

குரு கிருத்திகை பெயர்ச்சி.. சுகமாக வாழப்போகும் ராசிகள்.. பண மழையில் நனைவது உறுதி.. கொட்டும் யோகம்

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 12, 2024 11:11 AM IST

குரு பகவானின் நட்சத்திர இடமாற்றத்தால் ராஜயோகத்தை அனுபவிக்கப் போகும் ராசிகளை இங்கே காண்போம்.

நட்சத்திர பெயர்ச்சி
நட்சத்திர பெயர்ச்சி

குருபகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். குரு பகவான் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குரு பகவான் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் குருபகவான் வரும் ஏப்ரல் 16ஆம் தேதி அன்று கிருத்திகை நட்சத்திரத்தில் இடம் மாறுகிறார். அது சூரிய பகவானின் நட்சத்திரமாகும். அனைத்து ராசிகளுக்கும் குரு பகவானின் நட்சத்திர இடமாற்றம் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் நல்ல பலன்களை பெற போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது கொடுத்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மிதுன ராசி

 

குருபகவானின் கிருத்திகை நட்சத்திர இடமாற்றத்தால் உங்களுக்கு ராஜ யோகம் கிடைக்கப் போகின்றது. உங்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். சமூகத்தில் உங்களுக்கு மரியாதை அதிகரிக்கும். கௌரவம் உங்களைத் தேடி வரும். வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் முடிவாகும். புதிதாக ஆடம்பர பொருட்கள் வாங்குவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. புதிய முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும்.

கடக ராசி

 

குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். கடன் சிக்கல்கள் அனைத்தும் விலகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் இருக்கும். வெளிநாட்டு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு ஆதரவு கொடுக்கும். உறவினர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். நட்பு வட்டாரங்களால் உங்களுக்கு நல்ல யோகம் உண்டாகும்.

தனுசு ராசி

 

குருபகவான் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. கிருத்திகை நட்சத்திர பயணம் உங்களுக்கு பணம் மழையை கொட்டப் போகின்றது. புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். திட்டமிட்ட பணிகள் அனைத்தும் நிறைவேறும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். நெருக்கமானவர்களால் உங்களுக்கு நல்ல உதவி கிடைக்கும். உறவினர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு அன்பு அதிகரிக்கும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். பண வரவில் எந்த குறையும் இருக்காது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel